For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஏஇ: தீவிரவாததிற்கு ஆதரவு-அமெரிக்கருக்கு தண்டனை

Google Oneindia Tamil News

UAE
துபாய்: தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அமெரிக்கர் ஒருவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்சநீதிமன்றம் 18 மாத கால சிறைத் தண்டனை விதித்தது.

அவரது பெயர் நாஜி ஹம்தான். 43 வயதாகும் இவர் அரபு- அமெரிக்கர் ஆவார். இவர் மீது தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்தது, தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியது, தீவிரவாத குழுவில் இடம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

கடந்த ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை விசாரித்த எமிரேட்ஸ் உச்சநீதிமன்றம், ஹம்தானுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் ஹம்தான் விரைவில் விடுதலையாகி விடுவார்.

ஆனால் தனக்கும், தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தன்னை சித்திரவதைப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக ஹம்தான் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க கோர்ட்டுகளில் ஹம்தானுக்கு எதிரான ஆதாரங்களை காட்ட முடியாது என்பதால் எமிரேட்ஸ் கோர்ட்டில் வைத்து ஹம்தானை அமெரிக்க அரசு பழிவாங்கியிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்டவை கூறியுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X