For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார வீழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது!-அமெரிக்க நிறுவனம்

Google Oneindia Tamil News

Economic Growth
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடி காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக நேஷனல் அஸோஸியேஷன் ஆப் பிஸினஸ் எகனாமிக்ஸ் (NABE) என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த 44 பிரபல நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடம் முழுமையாக கருத்துக் கேட்பு நடத்தியுள்ளது.

அவர்களில் 80 சதவிகிதத்தினர், நெருக்கடி காலம் முடிந்துவிட்டதாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து NABE அமைப்பின் புதிய தலைவராகப் பதவியேற்கவுள்ள லின் ரீஸர் கூறுகையில், "நெருக்கடி காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. பெரும்பான்மையான தொழில் அமைப்புகள் அப்படித்தான் நம்புகின்றன. அதே நேரம் மீட்சிக்கான அறிகுறிகள் எதிர்பார்க்கிற அளவுக்கு வேகமாக இல்லை என்பதும் உண்மைதான்" என்றார்.

பொருளாதார மந்த நிலை அமெரிக்காவில் 2007-ம் ஆண்டு துவங்கியது. அமெரிக்க வீட்டு வசதித்துறை சரிந்ததால் துவங்கிய வீழ்ச்சி இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் வீழ்ச்சி நிலையிலேயே அமெரிக்கப் பொருளாதாரம் தவிப்பது இதுவே முதல்முறை.

இந்த ஆண்டு மந்தத்திலிருந்து மீட்சி வந்துவிடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு காலாண்டுகள் முடிந்தும் இன்னும் வெளிப்படையான மாறுதல்கள் தெரியவில்லை.

ஆனால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயம் பொதுமக்கள் உணரும் வகையிலான பொருளாதார மாறுதல்கள் தெரியத் துவங்கும் என இந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X