For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகம் முழுவதும் 587 பட்டாசு விபத்துகள்!
பள்ளிப்பட்டில் நடந்த விபத்தில் 35 பலியான நிலையில் சென்னையில் மட்டும் 108 பட்டாசு விபத்துகள் நடந்துள்ளன.
இது குறித்து தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் டி.ஜி.பி. நடராஜ் கூறுகையில்,
தீபாவளி தினத்தன்று நள்ளிரவு 12.30 மணி வரை கணக்கெடுப்பு நடத்தியதில் தமிழகம் முழுவதும் 587 பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 406 விபத்துகள்தான் நடந்தன. கடந்த ஆண்டு மழை பெய்ததால் விபத்துகள் குறைவாக இருந்தன.
சென்னையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு 102 விபத்துகள் நடந்தன. இந்த ஆண்டு சனிக்கிழமை நள்ளிரவுவரை 118 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தென் சென்னையில் அதிக பட்சமாக 38 விபத்துகள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவே என்றார்.
Comments
chennai fire தீ tamil nadu festival பண்டிகை விபத்து கொண்டாட்டம் crackers பட்டாசு தீபாவளி diwali accident
Story first published: Monday, October 19, 2009, 10:30 [IST]