For Daily Alerts
Just In
இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்
சென்னை: இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசனை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
சமீபத்தில் கணேசனுக்கு இதய அறுவை சிகி்ச்சை நடந்தது. அவர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந் நிலையில் இன்று காலை இல.கணேசன் வீட்டுக்கு அமைச்சர் பொன்முடியுடன் சென்ற ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
முதல்வர் கருணாநிதியின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பதிவுத்துறைக்கு லேப்டாப் வழங்கிய ஸ்டாலின்:
பின்னர் தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலர்களுக்கு ஸ்டாலின் லேப் டாப்களை வழங்கினார். சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் உடனிருந்தார்.
dmk health bjp stalin ஸ்டாலின் அமைச்சர் ganesan heart operation ponmudi பொன்முடி அறுவை சிகிச்சை இலகணேசன் நலம்
Story first published: Tuesday, October 20, 2009, 16:53 [IST]