For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நர்ஸை கடத்தி கற்பழித்த 2 வண்டலூர் பூங்கா ஊழியர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸ்காரர்கள் போல் நடித்து நர்ஸை கடத்திச் சென்று கற்பழித்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான நளினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நர்சாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 18ம் தேதி இரவு நளினி தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை சரவணன் என்பவர் ஒட்டினான்.

தாம்பரத்தைத் தண்டியும் அவன் ஆட்டோவை படுவேகமாக ஓட்டினான். அதை நிறுத்துமாறு நளினி கூறினார். ஆனால், சரவணன் கேட்கவில்லை. தொடர்ந்து படுவேகத்தில் ஓட்டிய சரவணன் ஊரப்பாக்கம் நோக்கி சென்றான்.

இதனால் பயந்து போன நளினி ஆட்டோவிலிருந்து குதித்துவிடுவதாக எச்சரித்தார். இதையடுத்து வேகத்தை குறைத்த சரவணன், ஆட்டோவை தாம்பரம் நோக்கி திருப்பினான்.

இரவு 9 மணி அளவில் ஆட்டோ வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வந்த போது இரண்டு பேர் ஆட்டோவை வழிமறித்தனர். தங்களை போலீஸ் என அவர்கள் கூறினர்.

இதை நம்பிய நளினி, ஆட்டோ டிரைவர் தன்னை தாம்பரத்தில் இறக்கிவிடாமல், ஊரப்பாக்கம் வரை கடத்தி வந்த தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவரை மிரட்டி அங்கிருந்து அனுப்பிய அந்த இருவரும் நளினியை போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று கூறி, தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றனர்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கார் நிறுத்துமிடம் எதிரே உள்ள வனப் பகுதிக்கு நளினியை கொண்டு சென்ற அவர்கள் இருவரும் நளினியை மானபங்கம் செய்தனர்.

நளினி உதவிகேட்டு கதறியும் பலனில்லாமல் போனது. இதையடுத்து இருவரும் தப்பிச் சென்றுவிடவே, அந்த இருட்டில் வனப் பகுதியில் இருந்து நளினி தட்டுத்தடுமாறி தாம்பரம் வந்து சேர்ந்தார்.

இது குறித்து நளினி நேற்று முன்தினம் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். இதைடுத்து இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கை விசாரிக்க ஜாங்கிட் உத்தரவிட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயாலஜிஸ்ட்டாக பணிபுரியும் பாஸ்கர் (49), டிரைவராகப் பணிபுரியும் வெள்ளைச்சாமி (49) ஆகிய இருவரும் தான் இந்த கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்டத தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் வண்டலூர் பூங்காவில் உள்ள குடியிருப்பில் தான் வசித்து வருகிறார்கள்.

கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது போல இன்னும் எத்தனை பெண்கள் இவர்களிடம் சிக்கி பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஆட்டோ டிரைவர் சரவணனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X