For Daily Alerts
Just In
சூடு பிடிக்கும் மோட்டார் சைக்கிள் விற்பனை
இந்தியாவின் கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் நல்ல விற்பனையை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்பனையில் ஊரகப் பகுதி விற்பனையின் அளவு 60 முதல் 65 சதவீதம் என்று வர்த்தகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை உயர்வு அளவு 14.9 சதவீதமாக உள்ளது. உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்பனையில் கிராமப்புறங்களின் பங்குதான் அதிகம். 60 முதல் 65 சதவீத விற்பனையை கிராமப்புற இந்தியா கண்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை 11.9 சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டில் 1.2 சதவீத விற்பனை உயர்வே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, October 25, 2009, 14:05 [IST]