For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட கிழக்குப் பருவ மழை-வானம் நோக்கும் விவசாயிகள்

Google Oneindia Tamil News

Delta farmers pray for NE monsoon
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 2வது வாரத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்காததால் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐப்பசியி்ல் அடைமழை பெய்ய வேண்டும். அதாவது தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 2வது வாரம் முதல் டிசம்பர் வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு மழை இன்னும் தொடங்கவில்லை.

இந்த மழையை நம்பி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், மழை பெய்யாததால் மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரையே முழுமையாக நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் அணையிலும் போதிய நீர் இல்லை. அணையின் நீர் மட்டம் 76 அடியாகவே உள்ளது. அணையிலிருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

நெற் பயிர்களுக்கு வரும் ஜனவரி இறுதி வாரம் வரை நீர் தேவைப்படும் நிலையில் இப்போதைய மேட்டூர் நீர் இருப்பைக் கொண்டு அதைப் பூர்த்தி செய்ய முடியாது.

எனவே, கர்நாடகத்திடம் பேசி கூடுதல் நீரைப் பெற்றாக வேண்டிய அவசியமான நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகம் நீர் தராவிட்டால் பருவமழை பெய்தால் மட்டுமே நெற் பயிரை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

தமிழகத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய நீரில் 3 டி.எம்.சியை கர்நாடகம் பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் அதன்அணைகளில் 90 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு உள்ளது.

பருவ மழை வருவதற்கான அறிகுறி!!!:

இதற்கிடையே வட கிழக்கு பருவ காற்று வீசத் தொடங்கியுள்ளதால் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரமபித்துள்ளது விவசாயிகளை கொஞ்சம் நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,

கடந்த 12ம் தேதி முதல் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீச ஆரம்பித்துள்ளது. இதனால் பருவமழை விரைவில் தொடங்கும் என்றார்.

புதன்கிழமை முதல் தமிழக, கேரள கடலோர மாவட்டங்களில் இந்த மழை தொடங்கலாம் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 23ம் தேதி தொடங்கி அரைகுறையாகப் பெய்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X