For Quick Alerts
For Daily Alerts
தொடர்கிறது 'கரடிப் பிடி'!

இதனால் 16000 புள்ளிகளுக்கும் கீழ் இறங்கியது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 57 புள்ளிகள் குறைந்த 4769 புள்ளிகளாகக் குறைந்துவிட்டது.
சர்வதேச பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்நது விற்பனை செய்து வருவதால், அதே போக்கு இந்திய பங்குச் சந்தையிலும் நிலவத் தொடங்கியுள்ளது. இதனால் தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது சென்செக்ஸ்.
இன்றை காலை வர்த்தகத்தில் ஸ்டெர்லைட் பங்குகள் அதிகபட்சமாக 3.3 சதவிகித நஷ்டம் கண்டன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டிஎல்எப், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கிகளின் பங்குகள் மூன்று சதவிகிதம் வரை குறைந்து கைமாறின.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையிலும் இறங்குமுகமான போக்கே நிலவியது. ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளிலும் இதே போக்கு நிலவியது.