For Daily Alerts
Just In
நில மாற்ற சர்ச்சை - அமிதாப் மீது தவறில்லை - உ.பி. கலெக்டர்

பாரபங்கி மாவட்டம், தெளலத்பூர் கிராமத்தில் முன்பு விவசாயி என்று கூறி அமிதாப் பச்சன் நிலம் வாங்கினார். இது பெரும் சர்ச்சையை எழுப்பவே இந்த நிலத்தை கிராம சபைக்கே தருவதாக அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த நிலம் நடிகை ஜெயப்பிரதாவுக்குச் சொந்தமான நிஷ்தா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து கிராம சபைத் தலைவி ராஜ்குமாரி சிங்கின் மகன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
மாஜிஸ்திரேட் தலைமையில் நடந்த இந்த விசாரமையில், அமிதாப் பச்சன் மீது இந்த விவகாரத்தில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமிதாப் பச்சன் மீதான புகாரை போலீஸார் நிராகரித்து விட்டனர்.