For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்து விவரங்களை வெளியிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

Google Oneindia Tamil News

K.G Balakrishnan
டெல்லி: தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட 21 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை இணையத் தளத்தில் (http://www.supremecourtofindia.nic.in/assets.htm) வெளியிட்டுள்ளனர்.

கடும் நெருக்கடிக்குப் பின்னர் இந்த விவரங்களை நீதிபதிகள் வெளியிட்டாலும் அவர்கள் சுயமாகவே இந்த விவரங்களை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் கூறுகிறது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியலில், அவருக்கு கேரளத்தின் எர்ணாகுளம் நகரில் 12 ஏக்கர் நிலமும், வைக்கம் தாலுகாவில் ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள குடும்ப சொத்தும், ஹரியாணாவின் பரிதாபாத் நகரில் ஒரு வீடும் பிளாட்டும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவருக்கு பிக்ஸட் டெபாசிட்டோ அல்லது பங்குகளில் முதலீடோ இல்லை.

இவரது மனைவிக்கு 20 சவரன் நகைகளும், ஒரு சாண்ட்ரோ காரும், கோட்டயத்தில் ஒரு நிலமும் உள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் நம்பர் 2 ஆன, நீதிபதி எஸ்.எச்.கபாடியா தாக்கல் செய்துள்ள விவரத்தில், ரூ. 22 லட்சம் அளவுக்கு பங்குகளில் முதலீடு உள்ளதாகவும், மேலும் ரூ. 18 லட்சம் அளவுக்கு மியூச்சுவல் பண்ட், பி்க்ஸட் டெபாசிட், பிராவிடண்ட் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவரிடம் வாகனம் ஏதும் இல்லை. மும்பையில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வீடும், மனைவியிடம் ரூ. 19 லட்சம் மதிப்புள்ள பங்குகளும், ரூ. 13 லட்சம் அளவுக்கு பிற முதலீட்டு பத்திரங்களும் உள்ளன.

நீதிபதி தருண் சாட்டர்ஜியிடம் கொல்கத்தாவில் ஒரு கட்டடமும், குடும்ப சொத்தில் 3ல் 2 பங்கும் உள்ளதாகவும், மனைவியிடம் வைரம், முத்து உள்ளிட்ட 46 நகைகளும், ரூ. 3.1 லட்சம் அளவுக்கு முதலீடுகளும் உள்ளதாகவும்,

தங்களிடம் டவேரா, ஹோண்டா சிவிக் ஆகிய 2 கார்களும், ரூ. 7.5 லட்சம் அளவுக்கு கடனும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிடம் அலாகாபாதில் மூதாதையர் சொத்து உள்ளது. ரூ.28 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை உள்ளது. பொது சேம நல நிதியில் ரூ.21 லட்சம் உள்ளது.


நீதிபதி அல்தமாஸ் கபீரிடம் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் ரூ. 30.75 லட்சம் மதிப்புள்ள வீடும், மனைவியிடம் 127 கிராம் தங்க நகைகளும், ரூ. 43 லட்சம் அளவுக்கு முதலீடுகளும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ரவீந்திரனிடம் பெங்களூரி்ல் 4 வீட்டு மனைகள், ஒரு வர்த்தக கட்டடம், இவரது மனைவியிடம் 3 வர்த்தக கட்டங்களுக்கான சொத்தில் 5ல் 1 பங்கு உள்ளது. மேலும் இவரது மனைவியிடம் 370 தங்க நகைகளும், 12 கேரட் வைர நகைகளும் 5 கிலோ வெள்ளி நகைகளும் உள்ளன.

நீதிபதி பி.சதாசிவத்திடம் 1989 மாடல் யமாஹா மோட்டர் சைக்கிளும், சென்னையில் ரூ. 45,000 மதிப்புள்ள ஒரு வீடும், ஈரோடு மாவட்டத்தில் 12.49 ஏக்கர் விவசாயம் நிலமும், இவரது மனைவியிடம் 5 ஏக்கர் நிலமும் உள்ளது.

தனது மற்றும் நெருங்கிய உறவினர்களின் பேரில் ரூ.15 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சொத்து விவரங்களை வெளியிட நீதிபதிகள் முன் வரவில்லை. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம் பெறுவார் என டெல்லி உயர் நீதிமன்றம் செப்டம்பர் 2ம் தேதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சொத்து விவரங்களை வெளியிட்டே ஆக வேண்டும் என சட்ட நிபுணர்களும், சில உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் நெருக்குதல் தந்தன். இதைத் தொடர்ந்தே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நீபதி எச்.எஸ்.பேடி தவிர மற்ற அனைத்து நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் கடந்த மாதம் 10ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வாலும் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட்டது மிகச் சிறந்த செயல் என மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

தினகரன் விவகாரம்-சர்வேதுறை உதவி கோரிக்கை:

இந் நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி.தினகரனின் நிலம் தொடர்பான சர்ச்சை குறி்த்து மத்திய சர்வே துறையிடம் இருந்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிக்கை கோரியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தினகரன் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளரா என்ற விவரத்தை தாக்கல் செய்யுமாறு அதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X