For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஸ்சார்ஜ் ஆனார் மது கோடா டிஸ்சார்ஜ் - இன்றே கைது?

Google Oneindia Tamil News

Madhu Koda
ராஞ்சி: ஊழல், பண மோசடி, ஹவாலா என பல சிக்கல்களில் மாட்டியுள்ள முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மது கோடா இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்றே அவர் கைது செய்யப்படக் கூடும் என செய்தி் அடிபடுகிறது.

ராஞ்சியில் உள்ள அப்துல் ரஸாக் வீவர்ஸ் நினைவு மருத்துவமனையில் கோடா அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி, ரத்த அழுத்தம் காரணமாக அவர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல் நலம் ஸ்திரமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் டிஸ்சார்ஜ் செய்யத் தகுதியான நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்தை முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை இன்றே கைது செய்ய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்டதும் மது கோடாவிடம், அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X