For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஆஸி. பிரதமர்: மனைவி சேலை வாங்கினார்

Google Oneindia Tamil News

Kevin Rudd and wife
சென்னை: ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் பயணம் செய்த விமானம் எரிபொருள் நிரப்புதவற்காக சென்னையில் இறக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் கெவின் ரூடின் மனைவி தெரேசா ரெய்ன் தி. நகருக்கு விஜயம் செய்து பட்டுச் சேலை வாங்கினார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மனைவியுடன் கிளம்பினார் ரூட். வரும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக அவரது விமானம் சென்னையில் இறங்கியது.

சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய பிரதமரை தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவ.ஜோதி ஜெகராஜன், இணை செயலாளர் (மரபு) சு.முருகையா, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கான அறையில் கெவின் ரூட் தங்க வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் அங்கு இருந்தார்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட ரூடின் மனைவி தெரேசா, தி. நகருக்குச் சென்று அங்குள்ள பிரபலமான ஜவுளிக் கடையில் காஞ்சிபுரம் பட்டுப் புடவை வாங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X