For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்க்​கட்​சித் தலை​வர்: அத்வானிக்கு பதில் சுஷ்மா

By Staff
Google Oneindia Tamil News

ஹைத​ரா​பாத்: மக்​க​ளவை எதிர்க்​கட்​சித் தலை​வர் பதவியிலிருந்து விலக அத்​வானி விருப்​பம் தெரி​வித்துள்​ளார். இப்போது எதிர்க்​கட்​சித் துணைத் தலை​வ​ராக உள்ள சுஷ்மா ஸ்வ​ராஜ் இந்தப் பொறுப்பை ஏற்​க​லாம் என்​று தெரிகிறது.

ஹைத​ரா​பாத்தில் நிருபர்களிடம் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,

பாஜக தலை​வர் ராஜ்​நாத் சிங்​கின் பதவி காலம் முடி​வு​று​வ​தை​யொட்டி அடுத்த தலை​வ​ராக மகா​ராஷ்​டிர பாஜக தலை​வர் நிதின் கட்​காரி தேர்வு செய்​யப்​ப​ட​லாம் என்பது யூகத்​தின் அடிப்​ப​டை​யில் வெளி​யா​ன செய்தியாகும்.

புதிய தலை​வர் குறித்து கட்​சி​யில் இது​வரை இறுதி முடிவு ஏதும் எடுக்​கப்​ப​ட​வில்லை. புதிய தலை​வர் ஒரு​ம​ன​தா​கத் தேர்வு செய்​யப்​ப​டு​வார். புதிய தலை​வ​ரைத் தேர்வு செய்​யும் வரை ராஜ்​நாத் சிங் தலை​வர் பத​வி​யில் தொடந்து நீடிப்​பார்.​ புதிய தலை​வ​ரைத் தேர்வு செய்​வது குறித்து கட்​சி​தான் இறுதி முடிவு எடுக்​குமே தவிர வேறு யாரும் இது குறித்து முடிவு செய்​ய​ மு​டி​யாது. (அதாவது ஆர்எஸ்எஸ் தலையிடாதாம்.. பாஜகவே முடிவெடுக்குமாம்)

கர்​நா​ட​கத்​தில் கட்​சி​யில் ஏற்பட்ட உட்​பூ​ச​லைத் தொடர்ந்து தென் மாநி​லங்​களை உன்​னிப்​பா​கக் கவ​னித்து வரு​கி​றோம். கர்​நா​டக விவ​கா​ரம் கட்​சித் தலை​மைக்கு மன​வே​த​னையை அளித்​தது. எனி​னும் பாஜக தேசிய கட்சி என்​ப​தால் இந்த விவ​கா​ரத்தை எளி​தில் கையாண்​டது.​

மக்​க​ளவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக உள்ள அத்​வானி,​ அப்​ப​த​வியி​லி​ருந்து விரை​வில் விலக விருப்​பம்
தெரி​வித்துள்​ளார் என்றார்.

தற்​போது மக்​க​ளவை எதிர்க்​கட்​சித் துணைத் தலை​வ​ராக உள்ள சுஷ்மா ஸ்வ​ராஜ் அப்​பொ​றுப்பை ஏற்​க​லாம் என்று சூசகமாகத் தெரிவித்தார்.

பெங்களூரில் நாளை ஆர்.எஸ்.எஸ். மாநாடு:

கர்நாடக பாஜகவில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில் பெங்களூரில் நாளை ஆர்எஸ்எஸ் மாநாடு நடக்கிறது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.

பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடக்கும் இம் மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையுடன் கலந்து கொள்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X