For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்யம் மோசடி ரூ.14,000 கோடி: குற்றப்பத்திரிகை வெளியிட்டது சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

Sathyam
ஹைதராபாத்: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மோசடி இத்தனை நாள் சொல்லப்பட்டது போல ரூ.7,800 இல்லை... ரூ.14,000 கோடி என்கிறது சிபிஐ.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் இந்த புலனாய்வு அமைப்பு.

சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7,800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை வாங்கியது மகிந்திரா நிறுவனம்.

சத்யம் ராமலிங்க ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடைசியாக மகிந்திரா சத்யம் துணைத் தலைவரும், ஆடிட் பிரிவு பொறுப்பாளருமான பிரபாகர் குப்தாவும் கைது செய்யப்பட்டார்.

இப்போது உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.

ராஜூ வாங்கிய கடன் ரூ.1,220 கோடி:

200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது.

மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1,065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன.

இவற்றில் 6000 ஏக்கர் நிலம், 40000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.

ராமலிங்க ராஜூ போலி பத்திரம் மூலம் வங்கியில் ரூ.1.220 கோடி கடன் வாங்கியுள்ளார். இந்த விவரம் முதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இப்போது அதையும் சேர்த்து இரண்டாவது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, அவர் ரூ.350 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ராஜூவுக்கு கல்லீரல் நோய்:

இதறகிடையே, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமலிங்க ராஜுவுக்கு, கல்லீரல் வீக்க நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ.8 லட்சம் செலவாகும். இந்த சிகிச்சைக்கான செலவை ஏற்க சிறைத்துறை மறுத்துவிட்டது.

சிகிச்சை செலவை தானே ஏற்பதாக ராமலிங்க ராஜூவின் மனைவி நந்தினி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சிறைத்துறை இயக்குனர் லோகேந்திர சர்மாவிடம் மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X