For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

24/11க்குப் பின் பெருமளவில் மாறிவிட்ட இந்திய பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: நவம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பெருமளவு மாறியுள்ளது இந்தியா.

மும்பையில் கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த பெரும் தீவிரவாதத் தாக்குதலின் ஓராண்டு நிறைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அன்று இருந்ததை விட இப்போது இந்தியா பாதுகாப்பு காட்சிகள் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனரான சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த ஒரு பார்வை...

- மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் மும்பை, கொல்கததா, சென்னை, ஹைதராபாத் நகரஙகளில் தலா 240 கமாண்டோக்களைக் கொண்ட என்.எஸ்.ஜி பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

- அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் முதல் ஹெல்மட் வரை அனைத்தும் நவீனமாகியுள்ளது. குண்டு துளைக்காத உடையிலும் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.

- என்.எஸ்.ஜி படையினரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும ஏற்றிச் செல்வதற்காக எட்டு தனியார் விமான நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

- இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்திக் கொள்ள என்.எஸ்.ஜி. ஒப்புதல் பெற்றுள்ளது. மேலும் என்.எஸ்.ஜி. படையினருக்கு பயிற்சி அளிக்க விமானப்படையும் முன்வந்துள்ளது.

- தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை புலனாய்வு செய்ய தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைக்கப்பட்ட்டுள்ளது. இந்த விசாரணைக்காக எந்த மாநில அரசிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற உரிமையும் என்.ஐ.ஏவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

- கடலோரப் பாதுகாப்பு கடல் அளவிலான மாற்றத்தைக் கண்டுள்ளது. ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கப்பல் மூலமாக மட்டுமல்லாமல் வான் ரீதியான பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

- ஒன்பது கடலோர மையங்களில் 46 கடலோர கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

- ஐந்து மினி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க கடற்படை முயன்று வருகிறது.

- கடலோரப் பாதுகாப்புப் படை 20 அதி வேக ரோந்துப் படகுளையும், 41 இடைமறிப்பு படகுகளையும், 12 கடலோரக் கண்காணிப்பு விமானங்களையும், 7 கடலோர ரோந்து வாகனங்களையும் வாங்க தீர்மானித்துள்ளது.

- மத்திய உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

- இதேபோல மாநிலங்களிலும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

- அனைத்து புலனாய்வு, உளவு அமைப்புகளும் தினசரி ஆலோசனைக் கூடடங்களை நடத்தி தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

- காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு அதிக அளவில் செலவிடப்படுகிறது.

- மும்பையில் 256 கமாண்டோக்களைக் கொண்ட போர்ஸ் ஒன்ற சிறப்பு் படைப் பிரிவு உருவாக்கப்பட்டுளளது.

- மும்பை போலீஸாருக்காக 2 புல்லட் புரூப் படகுகள் கண்காணிப்புப் பணிக்காக வாங்கப்பட்டுள்ளன.

- மும்பை போலீஸாரின் எண்ணிக்கை கூடுதலாக 1000 பேரைச் சேர்த்து 43000 ஆக அதிகரித்துள்ளது.

- தெற்கு மும்பையின் முக்கியப் பகுதிகளைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் 1000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

- நகர் முழுக்க 500 ரகசியக் காமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

- 1500 அதிக சக்தி வாய்ந்த வாகனங்கள், 20 அதி நவீன வாகனங்கள், படகுகளையும் மும்பை போலீஸார் தற்போது பெற்றுள்ளனர்.

- 39 நடமாடும் தாக்குதல் வாகனங்களும் தற்போது மும்பையை வலம் வந்து கொண்டுள்ளன. மேலும், ஐந்து இடங்களில் கமாண்டோப் படையினரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

- மும்பை போலீஸாருக்கு உதவுவதற்காக கொய்னா மற்றும் காவேரி என பெயரிடப்பட்ட இரு அதி வேக படகுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X