For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாசுகி முருகேசன் இரங்கல் கூட்டம் - கதறி அழுத ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

Stalin
கரூர்: கரூர் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கதறி அழுதார்.

கரூர் திமுக செயலாளர் வாசுகி முருகேசன் நேற்று தனது காரில் கோவை செல்லும் போது சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த டேங்கர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிருந்து கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு
போஸ்ட்மார்டம் செய்த பிறகு அவரது உடல் நேற்று இரவு கரூர் கொண்டு வரப்பட்டது.

கரூர் அருகே உள்ள தவளாபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாசுகி முருகேசன் இறந்த தகவல் அறிந்து தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் , மத்திய அமைச்சர்கள் ராஜா, பழனி மாணிக்கம், நெப்போலியன், காந்தி செல்வன், மாநில அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, கே.என்.நேரு, செல்வராஜ், எ.வ. வேலு, ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, சாமிநாதன், வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை, கீதா ஜீவன், பெரியகருப்பன் மற்றும் எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இன்று மதியம் தளவாபாளயத்தில் இருந்து வாசுகி முருகேசனின் இறுதி ஊர்வலம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,

கரூர் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் கார் விபத்தில் மரணமடைந்தார் என்ற தகவல் அறிந்து அதை தலைவர் கலைஞரிடம் சொல்ல முடியாமல் தவித்தோம். இருந்தும் அவரிடம் அதை சொல்லிய போது அவர் எங்களை கட்டிப்பிடித்து அழுதார். தலைவரால் அந்த துயரத்தை தாளவே முடியவில்லை.

வீராங்கனை என்று எத்தனையோ பேர் அடையாளம் காட்டியது உண்டு. ஆனால் வீரமங்கையாகவே வாழ்ந்தவர் வாசுகி முருகேசன்.

நான் வெளிநாடு சென்று விட்டு தமிழகம் வந்த பிறகு என்னை பார்க்க அவர் விமானம் பிடித்து வர இருந்தார். ஆனால் நான் விமானம் பிடித்து அவரது உடலை பார்க்கும் படியாக ஆகி விட்டது.

இந்த மாவட்டத்திலே அவர் என்னை பல நிகழ்ச்சிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், நான் இன்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும்படியாக ஆகிவிட்டது.

பேராசிரியர் கூறும் போது வாசுகியை ஒரு ஆணுக்கு சமம் என்றார். அவரது அனுமதியோடு கூறுகின்றேன். வாசுகி முருகேசன் பல ஆண்களுக்கு சமமாக கழக பணியாற்றிவர்.

அவரது மறைவுக்கு கலைஞர் சார்பிலும், திமுக தலைமை கழகம் சார்பிலும் அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியபோது துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X