For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலாளராகும் பரூக்கி

By Staff
Google Oneindia Tamil News

Stalin with Farooqui
சென்னை: தமி​ழக தொழில்துறை செய​லா​ளராக உள்ள எம்.எப்.பரூக்கி, மத்​திய அரசுப் பணிக்குச் செல்கிறார். மத்திய சுற்​றுச்​சூ​ழல் துறை​யின் கூடு​தல் செய​லா​ள​ராக டெல்லியில் பொறுப்பேற்கவுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இந்தத் துறையின் பங்கு மிக அதிகமாக உள்ள நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான பரூக்கி ஐஏஎஸ் இந்தத் துறையின் மூத்த அதிகாரியாக நியமி்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து த​மி​ழக தொழில்துறை​ புதிய செய​லா​ள​ராக,​ வணிக வரி​ மற்​றும் பத்​திர பதி​வுத் துறை​யின் செய​லா​ளர் ராஜீவ் ரஞ்​சன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதனால் முதன்மை செயலாளரும், வணிகவரித்துறை ஆணையருமான டி.ஜேக்கப், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக இருக்கும் முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, வணிகவரித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லி​ன் வசமுள்ள தொழில்துறை​யின் முதன்​மைச் செய​லா​ள​ராக இருந்​த பரூக்கி, பன்​னாட்​டுத் தொழில் நிறு​வ​னங்​களை தமி​ழ​கத்​துக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.

பதவி உயர்வு அடிப்​ப​டை​யில் அவ​ருக்கு இந்த டெல்​லிப் பணி கிடைத்​துள்​ளது. அவர் தானாக விரும்​பிச்
செல்​லவி​ல்லை.

முல்​லைப் பெரி​யாறு அணை விவகாரத்தில் மத்​திய சூற்​றுச்​சூ​ழல் துறை​யின் பங்கு முக்​கி​ய​மா​ன​தா​க உள்ள நிலையில் அந்தத் துறைக்கு முதல்வர் கருணாநிதி-துணை முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான பரூக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.

முல்​லைப் பெரி​யாறு அணை வவிகாரத்தில் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் துறை அமைச்​சர் ஜெய்​ராம் ரமே​ஷுக்​கும்,​ தமி​ழக அர​சுக்​கும் இடையே அண்​மை​யில் மோதல் நடந்தது.

டெல்லியில் மலையாள அதிகாரிகளின் நாட்டாமை அதிகரித்துவிட்டதாக முதல்வரே குற்றம் சாட்டும் நிலை உருவானது.

இந் நிலை​யில்,​ தமி​ழ​கத்​தில் இருந்து பரூக்கியை இந்தத் துறைக்கு மத்திய அரசு நியமித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் பின்னணியில் திமுக-காங்கிரஸ் அரசியல் உறவும் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையிலும், நிதித்துறையிலும் பணியாற்றியுள்ள பரூக்கி, சவுதி அரேபியாவில் துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X