India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ 16க்கு அரிசி வாங்கி ஒரு ரூபாய்க்கு விற்கும் தமிழகம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:​ மத்திய அரசிடம் ரூ 16-க்கு அரிசியை வாங்கி ஒரு ரூபாய்க்கு பொது வினி​யோ​கத் திட்​டத்​தின் கீழ் வழங்​குகிறது தமிழக அரசு. இதனால் அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது.

அரசியலுக்காக செய்யப்பட்டும் இந்த செலவால், மாநிலத்தில் பிற திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்துக்கு அரி​சி​க்கு தேவை அதிகமாகவும், சப்ளை குறைவாகவும் உள்ள நிலையில், மத்திய அரசிடம் வெளிச்சந்தை விலைக்கே அரசியைக் கேட்கிறது தமிழக அரசு.

இதன்படி ஒரு கிலோ ரூ.16 என்ற விலைக்கு மத்​திய அர​சி​டம் அரி​சி​யைப் பெறுகிறது தமிழகம்.

ஏற்கெனவே இதுகுறித்த கோரிக்கையை மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தது தமிழகம். அதற்கு மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

தமி​ழ​கம் கோரிய கூடு​தல் அரி​சியை தர ஒப்​புக் கொண்ட​தா​க​வும்,​ அதற்​கான பதிலை தமி​ழக அரசு இது​வரை அளிக்​க​வில்லை, என​வும் மத்​திய வேளாண்​மைத் துறை அமைச்​சர் சரத்​ப​வார் மக்​க​ள​வை​யில் செவ்​வாய்க்​​ழமை கூறி​யது நினைவிருக்கலாம். எனவே தனது சம்மதக் கடிதத்தை இப்போது தமிழக அரசு அளிக்க உள்ளது.

தமி​ழ​கத்​தில் நியாய விலைக் கடை​க​ளில் வழங்​கப்​ப​டும் அரி​சி​யின் ஒரு​மாத தேவை​யின் அளவு 2.55 லட்​சம் டன்​கள். ஆனால்,​ மத்​திய அரசு தமி​ழ​கத்​துக்கு வழங்​கும் அரி​சி​யின் அளவு 2.3 லட்​சம் டன்​தான். எனவே இது தேவை​யின் அளவை விட 25 ஆயி​ரம் மெட்​ரிக் டன் குறை​வா​கும்.

மத்​திய அரசு வழங்​கும் 2.3 லட்​சம் டன்​னில்,​ வறு​மைக் கோட்​டுக்கு கீழே உள்​ள​வர்​க​ளுக்கு என கிலோ ரூ.5.65ல்,​ 1.04 லட்​சம் டன் அரி​சி​யும்,​

வறு​மைக் கோட்​டுக்கு மேலே உள்​ள​வர்​க​ளின் பயன்பாட்டுக்கு கிலோ ரூ.8.30 என்ற அள​வில் 1.26 லட்​ம் டன் அரி​சி​யை​யும் மத்​திய அரசு தரு​கி​றது.

இந்த அரி​சி​யைகத்தான் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு நியாய விலைக் கடை​க​ளில் வழங்கி வரு​கி​றது. கூடு​தல் அரி​சித் தேவை இருந்​தால்,​ அதை வெளிச் சந்தை விலைக்கு பெற்​றுக் கொள்​ள​லாம் என்று மத்​திய அரசு கூறி​யி​ருந்​தது.

இதைத் தொடர்ந்து தனக்கு தேவையான 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ 16 என வாங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது. உண்மையில்​ இதை​ கிலோ​வுக்கு ரூ.18 என்ற அள​வில் மத்​திய அரசு விற்​கச் சொல்​கி​றது.

ஆனால் கிலோவுக்கு ரூ 15 நஷ்டத்துக்கு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசியை தமிழக அரசு தருவதால், கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது.

இந்த அளவு விலைக்கு வேறு எந்த மாநிலமும் மத்திய அரசிடம் அரிசி வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X