For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எம்பிக்கள் குழு அனுப்ப இந்தியா திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

SM krishna
டெ​‌ல்லி: இலங்கையில் தமி​ழ‌ர்​க​ளு‌க்​கான நிவா​ர​ண‌ப்​ ப​ணி​க‌ளை ‌நேரி‌ல் ஆ‌ய்வு ‌செ‌ய்ய எ‌ம்​பி‌க்​க‌ள் குழு‌வை அனு‌ப்​பு இந்தியா பரிசீ​லித்து வருவதாக ‌‌வெளி​யு​றவு அ‌மை‌ச்​ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.கிரு‌ஷ்ணா கூறினார்.

இல‌ங்‌கை தமி​ழ‌ர் பிர‌ச்‌சனை ‌தொட‌ர்​பாக நாடாளுமன்றத்தில் கிரு‌ஷ்ணா அறி‌க்‌கை தா‌க்​க‌ல் ‌செ‌ய்​தா‌ர்.

இலங்கை நிலை தான் இந்திய நிலையா?-திமுக:

அப்போது பேசிய திமுக எம்பி டி.‌கே.எ‌ஸ். இள‌ங்​‌கோ​வ‌ன் ​‌பேசு​‌கை​யி‌ல்​, அ‌மை‌ச்​ச‌ர் கிரு‌ஷ்​ணா​வி‌ன் அறி‌க்‌கை இல‌ங்‌கை அர​சி‌ன் நி‌லை‌யை பிர​திப​லி‌ப்​ப​தா​க‌வே உ‌ள்​ளது எ‌ன்றார்.

மதிமுக எம்பி கணே​ச​மூ‌ர்‌த்தி​ பேசுகையில், இல‌ங்​‌கை​யி‌ல் மனித உரி​‌மை​க‌ள் மீற‌ப்​ப​டு​வது குறித்து அ‌மை‌ச்​ச​ரி‌ன் அறி‌க்​‌கை​யி‌ல் எது​வுமே இல்லை என்றார்.

இதற்கு பதிலளித்து கிருஷ்ணா பேசுகையில்,

இல‌ங்‌கை அரசு இ‌ப்​‌போது கவ​ன‌ம் ‌செலு‌த்​த​‌வே‌ண்​டி​யது தமி​ழ‌ர்​க‌ளை ‌சொ‌ந்த இட‌ங்​க​ளி‌ல் குடி​ய​ம‌ர்‌த்​து​வது,​ அவர்கள் இய‌ல்பு வா‌ழ்‌க்‌கை ‌தொட‌ங்க நிவா​ரண உதவி அளி‌ப்​பது,​
சம​ர​ச‌ப் ‌பே‌ச்சு நட‌த்​து​வது ஆகி​ய‌வை மீது​தா‌ன். இ‌ந்த முய‌ற்​சி‌க்கு இ‌ந்​தியா அ‌னை‌த்து உத​வி​க​‌ளை​யு‌ம் ‌செ‌ய்​யு‌ம்.

விடுதத‌லை‌ ப்பு​லி​க‌ளை ஒழி‌க்க இல‌ங்‌கை ராணு​வ‌ம் எடு‌த்த நட​வ​டி‌க்​‌கை​யி‌ன்​‌போது இல‌ங்​‌கை​யி‌ன் வட​ப​கு​தி​யி‌ல் வசி‌த்த 3 ல‌ட்​ச‌ம் தமி​ழ‌ர்​க‌ள் அரசு அ‌மை‌த்த மு‌ள்‌வேலி முகா‌ம்​க​ளி‌ல் அ‌டை‌க்​க‌ப்​ப‌ட்​ட​ன‌ர். இ‌ந்த முகா‌ம்​க​ளி‌ல் அடி‌ப்​ப‌டை வச​தி​க‌ள் இ‌ல்‌லை எ‌ன்று புகா‌ர் எழு‌ந்​தது.

இ‌தை​ய​டு‌த்து தமி​ழக முத‌ல்​வ‌ர் கரு​ணா​நிதி முய‌ற்​சி​யா‌ல் தமி​ழ​க‌த்தி​லி​ரு‌ந்து எ‌ம்​பி‌க்​க‌ள் குழு அ‌க்​‌டோ​ப​ரி‌ல் இல‌ங்‌கை ‌செ‌ன்று முகா‌ம்​க‌ளை பா‌ர்​‌வை​யி‌ட்​டது. தமி​ழ‌ர்​க‌ளை வி‌ரை​வாக ‌சொ‌ந்த வீடு​க​ளு‌க்கு அனு‌ப்​பு‌ம்​படி அ‌ந்த குழு ‌கோரி‌க்‌கை விடு‌த்​தது.

இத‌ன்​ப​ல​னாக​ தமி​ழ‌ர்​க‌ள் அ‌னை​வ​ரு‌ம் ‌சொ‌ந்த இட‌ங்​க​ளி‌ல் 6 மாத‌ங்​க​ளி‌ல் குடி​ய​ம‌ர்‌த்​த‌ப்​ப​டு​வா‌ர்​க‌ள் என இல‌ங்‌கை அறி​வி‌த்​தது. சுமா‌ர் ஒ‌ன்​ற‌ரை ல‌ட்​ச‌ம் தமி​ழ‌ர்​க‌ள் ‌சொ‌ந்த இட‌ங்​க​ளி‌ல் குடி​ய​ம‌ர்‌த்​த‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தாக இல‌ங்‌கை
‌தெரி​வி‌த்​து‌ள்​ளது. இ‌ன்​னு‌ம் ஒரு ல‌ட்​ச‌த்து 45 ​ஆயி​ர‌ம் ‌பே‌ர் முகா‌ம்​க​ளி‌ல் உ‌ள்​ள​ன‌ர். வரு‌ம் ஜன​வ​ரி‌க்​கு‌ள் அ‌னை‌த்து தமி​ழ‌ர்​க​ளு‌ம் ‌சொ‌ந்த இட‌ங்​க​ளி‌ல் குடி​ய​ம‌ர்‌த்​த‌ப்​ப​டு​வா‌ர்​க‌ள் எ‌ன்று இல‌ங்‌கை உறுதி அளி‌த்​து‌ள்​ளது.

ஆனா‌ல் 6 மாத‌த்​தி‌ல் முடி​ய‌க்​கூ​டிய பணி​யாக இது ‌தெரி​ய​வி‌ல்‌லை. ​ நீ‌ண்​ட​கா​ல‌த்​து‌க்கு தமி​ழ‌ர்​க‌ள் முகா‌ம்​க​ளி‌ல் அ‌டை​ப‌ட்டு கிட‌ப்​ப‌தை இ‌ந்​தியா ஏ‌ற்​காது.

தமி​ழ‌ர்​க‌ளை ‌சொ‌ந்த இட‌ங்​க​ளி‌ல் குடி​ய​ம‌ர்‌த்​து​வது ‌தொட‌ர்​பாக அதி​ப‌ர் மகி‌ந்த ராஜ​ப‌ட்​ச​வு​ட‌ன் அ‌ண்​‌மை​யி‌ல் இல‌ங்‌கை ‌செ‌ன்ற நிதிய‌மை‌ச்​ச‌ர் பிர​ணா‌ப் முக‌ர்ஜி ஆ‌லோ​ச‌னை நட‌த்​தி​னா‌ர்.​

இல‌ங்​‌கை‌ப் ​பி​ர‌ச்ச​‌னை‌யை தமி​ழ‌ர் பிர‌ச்​‌சனை​யாக குறு‌க்​கி‌க்​‌கொ‌ண்டு அணு​க​வி‌ல்‌லை. ‌தேசிய பிர‌ச்​‌சனை​யாக அணு​கு​கி​றோம். அத​னா‌ல்​தா‌ன் தமி​ழ‌ர் பிர‌ச்ச‌னை எ‌ன்‌றோ அ‌ல்​லது மாநி​ல‌ப் பிர‌ச்‌சனை எ‌ன்‌றோ தடா​ல​டி​யாக பிர‌ச்​ச‌னை‌யை அணு​கா​ம‌ல் ‌தேசிய க‌ண்​‌ணோ‌ட்​ட‌த்​தி‌ல் பிர‌ச்ச‌னை அணு​க‌ப்​ப​டு​கி​றது.

கூடுதல் நிதி அளிக்க தயார்:

தமி​ழ‌ர்​க​ளு‌க்கு அதி​கா​ர‌ம் அளி‌க்க வ‌கை​‌செ‌ய்​யு‌ம் தி‌ட்​ட‌த்‌தை அம‌ல்​ப​டு‌த்​து‌ம்​படி இல‌ங்‌கை அர‌சை இ‌ந்​தியா ‌தொட‌ர்‌ந்து வலி​யு​று‌த்தி வரு​கி​றது.

முகா‌ம்​க​ளி‌ல் அ‌டை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்ள தமி​ழ‌ர்​க‌ளை ‌சொ‌ந்த இட‌ங்​க​ளி‌ல் குடி​ய​ம‌ர்‌த்த இ‌ன்​னு‌ம் கூடு​த‌ல் நிதி உதவி ‌செ‌ய்​ய​வு‌ம் இ‌ந்​தியா தயா​ராக உ‌ள்​ளது. ஏ‌ற்​‌கெ​ன‌வே இ‌ந்தப் பணி‌க்​காக இ‌ந்​தியா ரூ. 500 ‌கோடி ஒது‌க்​கி​யது.

இல‌ங்‌கை ‌செ‌ன்ற தமிழக எ‌ம்​பி‌க்​க‌ள் குழு​வி‌ன் பரி‌ந்​து​‌ரை‌யை ஏ‌ற்று க‌ண்​ணி​‌வெ​டி​க‌ளை அக‌ற்​று​வ​த‌ற்​காக ‌மேலு‌ம் 3 குழுக்களை இ‌ந்​தியா அனு‌ப்​ப​வு‌ள்​ளது.

அதே போல தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த இல‌ங்​‌கை‌க்கு எ‌ம்​பி‌க்​க‌ள் அட‌ங்​கிய ம‌ற்​‌றொரு குழு‌வை அனு‌ப்​பு​வது ப‌ற்றி அரசு பரிசீ​லி‌க்​கு‌ம் எ‌ன்​றா‌ர் எ‌ஸ்.எ‌ம்.கிரு‌ஷ்ணா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X