For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனாட்சி அம்மன் கோயி​லில் தேங்​காய்க்கு தடை: இந்து அமைப்​பு​கள் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: பாது​காப்பை காரணம் காட்டி மதுரை மீனாட்சி சுந்​த​ரே​சு​வ​ரர் திருக்​கோயிலில் தேங்​காய் உடைப்​ப​தற்கு தடை விதித்துள்ள அறநிலையத் துறைக்கு இந்து அமைப்​பு​கள் கடும் கண்​ட​னம் தெரி​வித்துள்ளன.

மது​ரை​யில் இந்து ஆன்​மிக சமு​தாய இயக்​கங்​கள் கூட்​டம்,​ மதுரை இந்து ஆல​யப் பாது​காப்​புக் குழு அலு​வ​ல​கத்​தில் நடை​பெற்​றது.​ இந்த கூட்டத்திற்கு ஆல​யப் பாது​காப்​புக் குழு மாநி​லச் செய​லர் நர​சிம்​மா​சாரி தலைமை வகித்​தார்.​

கூட்​டத்​தில்,​​ மதுரை மீனாட்சி அம்மன் ​கோயி​லில் கோயில் பாது​காப்பை காரணம் காட்டி தேங்​காய் உடைப்​ப​தற்​குத் தடை விதித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதற்​கான ஆட்​சே​பனை மனுக்​களை அனைத்​துப் பகு​தி​க​ளில் இருந்​தும் பக்தர்கள் கோயில் நிர்​வா​கத்​துக்கு அனுப்​பி​வைக்க வேண்​டும் போன்ற பல தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

இந்த கூட்டத்தில் இந்து முன்​ன​ணி​யின் மதுரை மாவட்​டத் தலை​வர் பர​ம​சிவம்,​​ பாஜக மாநி​லப் பார்​வை​யா​ளர் சுரேந்​தி​ரன்,​​ மாவட்​டத் தலை​வர் சசிரா​மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X