21க்கு கல்யாண டார்ச்சர் தரும் 55 வயது ஆசிரியர்
சேலம்: 55 வயதான ஆசிரியர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு செய்து வருவதாக சேலம் நர்ஸிங் பயிற்சி கல்லூரி மாணவி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பெரியாம்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரேசன். இவரது மகள் சிந்து (21).
இவர் சேலம் டி.ஐ.ஜி வன்னியபெருமாளிடம் அளித்துள்ள புகார் மனுவில்,
நான் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தேன். தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் மோகன்குமாரவேல் (55 வயது) என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார். எனக்கு இதில் விருப்பம் இல்லை.
ஆனால், அவர் என் கல்லூரிக்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இதையடுத்து என்னை தொந்தரவு செய்யமாட்டேன் என காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் மோகன் குமாரவேல் என எழுதி கொடுத்துச்சென்றார்.
ஆனாலும், தொடர்ந்து மோகன்குமாரவேல் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார். இல்லையெனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.
எனவே, எனக்கு தகுந்த பாதுகாப்பும், என்னை கொலை மிரட்டல் விடுத்த குமாரவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் உத்தரவிட்டார். 55 வயது ஆசிரியர் 21 வயது பெண்ணிடம் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துவது கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications