For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதராபாத் விமான கண்காட்சியில் விமான விபத்து- விமானி உள்பட 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

Sagar Pawan
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று நடந்த விமானக் கண்காட்சியில் கடற்படைக்குச் சொந்தமான விமானம் கீழே விழுந்து கட்டடங்கள் மீது மோதி வெடித்துச் சிதறியதில் விமானி உள்பட 2 பேர் பலியாயினர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இன்று காலை பேகம்பேட் விமான நிலையத்தில் விமானக் கண்காட்சி தொடங்கியதும் கடற்படையின் சாகர் பவன் பிரிவைச் சேர்ந்த நான்கு HJT-16 Kiran Mk2 ரக விமானங்கள் சாகஸங்களை செய்து காட்டிக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து மற்ற விமானங்களில் இருந்து பிரிந்து சென்றது. அடுத்த சில வினாடிகளில் வானில் சுற்றி, சுழன்றபடி அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகே உள்ள கட்டங்கள் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில் அதிலிருந்த விமானியும் கட்டடத்தில் இருந்த ஒருவரும் பலியாகிவிட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X