For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு-செயலாளரானார் வருண் காந்தி

By Staff
Google Oneindia Tamil News

Varun Gandhi
டெல்லி: பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சித் தலைவர் நிதின் கத்காரி இன்று வெளியிட்டார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய வருண் காந்திக்கு செயலாளர் பதவியை அளித்துள்ளார் கத்காரி.

இதேபோல ஹேமமலானி, வசுந்தரா ராஜே உள்ளிட்டோருக்கும் பதவிகள் கிடைத்துள்ளன.

புதிய நிர்வாகிகள் பட்டியல்:

தலைவர் - நிதின் கத்காரி

துணைத் தலைவர்கள் - சாந்தகுமார், கல்ராஜ் மிஸ்ரா, வினய் கத்தியார், பகத்சிங் கோஷியாரி, முக்தார் அப்பாஸ் நக்வி, கருணா சுக்லா, நஜ்மா ஹெப்துல்லா, ஹேமமாலினி, பிஜோய சக்கரவர்த்தி, புருஷோத்தம் ருபாலா, கிரண் கய்.

பொதுச் செயலாளர்கள் - அனந்த்குமார், தவர்சந்த் கெலாட், வசுந்தரா ராஜே, விஜய் கோயல், அர்ஜூன் முண்டா, ரவிசங்கர் பிரசாத் (தலைமை செய்தித் தொடர்பாளர் பதவியும் வகிப்பார்), தர்மேந்திரா பிரதான், நரேந்தர்சிங் டோமர், ஜெகத் பிரகாஷ் நத்தா, ராம் லால், சதீஷ், செளதான் சிங்.

செயலாளர்கள் - சந்தோஷ் கங்வார், ஸ்மிரிதி இராணி, சரோஜ் பாண்டே, கிரண் மகேஸ்வரி, தபீர் காவ், நவ்ஜோத் சிங் சித்து, அசோக் பிரதான், வருண் காந்தி, முரளிதர் ராவ், கிரித் சோமய்யா, லட்சுமண், கேப்டன் அபிமன்யூ, அரதி மெஹ்ரா, பூபேந்திர யாதவ், வாணி திரிபாதி.

பொருளாளர் - பியூஷ் கோயல்.

செய்தித் தொடர்பாளர்கள் - பிரகாஷ் ஜாவேத்கர், ராஜீவ் பிரதாப் ரூடி, ஷானவாஸ் ஹூசேன், ராம்நாத் கோவிந்த், தருண் விஜய், நிர்மலா சீதாராமன்.

ஆர்.எஸ்.எஸ். அணி அல்ல...?

பாஜக புதிய நிர்வாகிககள் பட்டியல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் திருப்தி தரவில்லை என்று பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.

பெண்களுக்கு நிர்வாகிகள் பட்டியலில் போதிய அளவுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், இது சமத்துவம் நிறைந்த பட்டியல். இளைஞர்களுக்கும், அனுபவம் மிக்கவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிராந்திய சம நிலையும் காணப்படுகிறது என்றார்.

அனைத்து பாஜக முன்னாள் முதல்வர்களுக்கும் தேசிய செயற்குழு அல்லது பிற பிரிவுகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக கூறினாலும் கூட ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவு அணியாக இது இல்லை என்று புகைச்சல் கிளம்பியுள்ளது.

வருண் காந்திக்கு செயலாளர் பதவி தரப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

அதேசமயம், காங்கிரஸில் ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதை எதிர்கொள்ள வருண் காந்திக்குப் பதவி கொடுத்து அவரை வளர்த்து விட பாஜக முயல்வதாக கூறப்படுகிறது.

மேலும் பாஜகவை உ.பியில் வலுவுடைய கட்சியாக மாற்ற வருண் காந்தியை முன்வைத்து கேம் ஆட கத்காரி திட்டமிட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பில்லை:

பாஜக நிர்வாகிகள் பட்டியலில், முக்கியப் பொறுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமமாலினியின் பூர்வீகம் தமிழகமாக இருந்தாலும் அவரை தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக யாரும் கருதுவதில்லை. அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு பாஜக நிர்வாகிகள் பட்டியலில் பெரும் பட்டை நாமமே கிடைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X