For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைதி மக்களிடம் கைகுலுக்கிவிட்டு கிளிண்டன் சட்டையில் கை துடைத்த புஷ்!

By Staff
Google Oneindia Tamil News

Bush and Clinton
போர்டாபிரின்ஸ்: ஹைத்தியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வியர்வை படிந்த கைகளை குலுக்கிய பின்னர், தனக்கு முன்பாக திரும்பி நின்றுகொண்டிருந்த பில் கிளின்டனின் சட்டையில் ஜார்ஜ் புஷ் கையை துடைத்ததாக புகார் எழுந்துள்ளது.

ஹைத்தியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹைத்திக்கு சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தனது அறக்கட்டளை சார்பில் ஹைத்தியில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன், பில் கிளின்டன் சில தினங்களுக்கு முன்பு ஹைத்தி தலைநகர் போர்டா பிரின்ஸ் நகருக்கு வந்திருந்தார்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சென்று ஆறுதல் கூறுவதற்காக இரண்டு மாஜி அதிபர்களும் சென்றனர்.

அப்போது அங்கு கூடிய மக்களிடம் இருவரும் கை குலுக்கி சமாதானமும், ஆறுதல் வார்த்தைகளும், உற்சாகமும் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

பில் கிளின்டன் மிக உற்சாகமாகவும், புன் சிரிப்புடனும் மக்களிடம் தொட்டுப் பேசி, சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

அவருக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்த ஜார்ஜ் புஷ், ஒரு பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வியர்வை படிந்த கைகளை குலுக்கி விட்டு, யாரும் கவனிக்காத வகையில் கிளின்டனின் தோள் பகுதி சட்டையில் கையை துடைத்துக் கொண்டார்.

பிபிசி செய்தி தொகுப்பு ஒன்றின் வீடியோவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதன் மூலம் ஜார்ஜ் புஷ் ஹைத்தி மக்களுக்கு செயற்கையாக ஆறுதல் கூறி, பாமர மக்களை அவமானப் படுத்திவிட்டார் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், புஷ்ஷும் கிளிண்டனும் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். கிளண்டனுக்கு அறக்கட்டளை பணி காரணமாக ஹைத்தியில் மிகுந்த நேரத்தை செலவிட முடியும். ஆனால் எப்போதும் பிஸியாகவே இருக்கும் புஷ்ஷுக்கு நேரமாகி விட்டதால் சீக்கரம் போகலாம் என கிளிண்டனை அவர் நெட்டித் தள்ளியது, கை துடைத்தது போல தோன்றுகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.

அதோடு, இந்த வீடியோ காட்சிகள் யதார்த்தமான நிகழ்வை பதிவு செய்யப்பட்டதா அல்லது திட்டமிட்டும் மார்ஃபிங் வேலைகளுடன் குறும்புத்தனமாக வெளியிடப்பட்டதா என்பது குறித்தும் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X