For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: காலாவதியான மருந்து, மாத்திரைகளை புதியது போல மாற்றி விற்கப்படும் மோசடி அம்பலமானதை அடுத்து, பொதுமக்கள் மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மருந்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

மருந்துகள் வாங்கியதற்கு கடைக்காரர்களிடம் இருந்து ரசீது கேட்டுப் பெற வேண்டும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும். மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

மற்றவர்களுடைய நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம்.

அல்லது 044 24338421, 24328734, 24310687, 24351581 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விளங்கங்கள் பெறலாம் என மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.


மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தொடரும்

இதற்கிடையே, காலாவதியான மருந்துகளை விற்றவர்கள் மீதான அரசின் நடவடிக்கை தொடரும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கு.​ சுப்புராஜ் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதுபற்றி குறிப்பிடுகையில்,

'காலாவதியான மருந்துகள் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.​ ஏனெனில் இது குறித்த அரசின் நடவடிக்கை தீவிரமாக தொடரும்.​

இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ தலைமறைவான நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காலாவதியான மருந்துகளை வைத்திருக்கும் மருந்துக் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள மருந்துகளை ஓரிடத்தில் வைத்து அதில் விற்பனைக்கு அல்ல என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.​

அந்த மருந்துகளை அந்தந்த மருந்து நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி விட வேண்டும்.​ இந்த விவகாரம் குறித்து மருந்து விற்பனையாளர்களும் பயப்படத் தேவையில்லை' என்றார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X