For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுக்க 2 மணிநேர மின்வெட்டு இருப்பது உண்மையே! - மின்வாரியம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:​ மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு இருப்பது உண்மைதான் என்று மின் வாரியத் தலைவர் சி.பி.​ சிங் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சி.பி.​ சிங் கூறியதாவது:

தேவையைக் கருத்தில் கொண்டு,​​ மின் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்த மக்கள் முன்வரவேண்டும்.

தமிழகத்தில் 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் 3,800 கோடி மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு,​​ 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5,300 கோடி மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இப்போது 1,100 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது.​ இந்த பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்படுவது உண்மைதான்.

இப்போது நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு,​​ கோடை காலத்தில் உயர்த்தப்படாது.​ இதே அளவில்தான் மின்வெட்டு இருக்கும்.​ மே 15-ம் தேதிக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிவிடும்.​ அதன்பிறகு மின் பற்றாக்குறை ஓரளவு குறையும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக,​​ டபிள்யு.டபிள்யு.எப் இந்தியா என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி,​​ சனிக்கிழமை ​(மார்ச் 27) காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை வீடுகளில் தேவையற்ற விளக்குகளை அணைத்து,​​ ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.​ இந்த நடவடிக்கை மூலம் 60 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்படும்," என்றார்.

வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்

இந்த சந்திப்பில் பங்கேற்ற சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பேசியது: ​​

"தேசிய வன கொள்கையின் படி நிலப் பரப்பில் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டும்.​ இந்த இலக்கை எட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம்,​​ கூடுதலாக 24 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு அதிகரித்துள்ளது.​ இதன்படி இப்போது தமிழகத்தில் 22 சதவீத நிலப்பரப்பு,​​ வனப் பகுதியாக உள்ளது.​ இதை 33 சதவீதமாக உயர்த்துவதற்காக,​​ 2010 -11 நிதியாண்டில் ரூ.​ 25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X