For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடி எனது பெஸ்ட் ஃபிரண்ட் –கோவா காங். முதல்வர் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

Digambar Kamat
பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர் என கோவா காங்கிரஸ் முதல்வர் திகம்பர் காமத் பாராட்டிப் பேசியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கோவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது காமத் பேசுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர். மாநாடு எதற்காகவாது நான் டெல்லிக்குப் போனால் ஒரு பக்கம் முதல்வர் ஷீலா தீட்சித் இருப்பார். இன்னொரு பக்கம் மோடி இருப்பார்.

மோடி என்னை அழைத்தால் நான் நிச்சயம் குஜராத்துக்குப் போவேன் என்று கூறினார் காமத். இது கோவா காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமத் முன்பு பாஜகவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமத்தின் பேச்சு குறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் ஷிரோத்கர் கூறுகையில், ஏன் அப்படிப் பேசினார் என்பதை காமத்திடம்தான் கேட்க வேண்டும். கட்சி மேலிடம்தான் இதுகுறித்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு மேல் இதுகுறித்து பேச விரும்பவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X