For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை - சேலம் விமான சேவை இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே!

By Staff
Google Oneindia Tamil News

Kingfisher
சேலம்: பெரும்பாலும் காலி இருக்கைகளுடன் இயக்க வேண்டியிருப்பதால் இனி சென்னை - சேலம் தினசரி விமான சேவை வாரம் 5 நாட்களுக்கு மட்டும் என குறைக்கப்பட்டு விட்டது.

கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் தனியார் நிறுவனமான கிங்பிஷர் விமானங்களை இயக்கி வந்தது. தினசரி சேவையாக பகல் 2.50 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி 3.50க்கு சேலத்துக்கும், மீண்டும் மாலை 4.20க்கு கிளம்பி 5.20க்கு சென்னைக்கும் இந்த விமானங்கள் இயங்கின.

ஆரம்பத்தில் ஓரளவு கூட்டத்துடன் இயங்கிய விமானங்கள், போகப் போக 50 சதவிகிதம் கூட பணிகள் இல்லாமல், காலி இருக்கைகளுடன் பறக்க வேண்டி வந்தது.

இதனால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், சேலம் - சென்னை விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது கிங் பிஷர். இதனால் சேலம்வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காலி இருக்கை பயணம் தொடர்ந்தால் மேலும் ஒரு சர்வீஸைக் குறைக்கவும் கிங்பிஷர் திட்டமிட்டுள்ளது.

சென்னை - சேலம் மார்க்கத்தில் விமான சேவை கேட்டு நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்திருந்தனர் சேலம்வாசிகள். பெரும் தொழிலதிபர்களிடமிருந்து ஏகப்பட்ட பிரஷர் வேறு. ஆனால் விமான சேவை துவங்கிய பிறகு, அந்த தொழிலதிபர்களே இந்த விமான சேவையை உபயோகப்படுத்தவில்லை என்பது சேலம் விமானநிலைய அலுவலர்களின் கருத்து!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X