For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் ஊனமுற்றோர்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி – ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: ஆட்சியின் கடைசி கட்டத்தில் மாற்று திறனாளிகளுக்காக தனித்துறை அமைக்கப்படும் என்றும், இதற்காக 176 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்து இருப்பது ஊனமுற்றோர்களை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் 1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டது.

ஊனமுற்றோர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் 1992-ம் ஆண்டு ஊனமுற்றோர் மறு வாழ்வுக்கென ஒரு தனித்துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994-ம் ஆண்டின் முதன் முறையாக எனது அரசு தான் ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது.

ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்கவும், மற்றும் சமுதாயத்துடன் அவர்கள் இணைந்து முழுவதுமாக பங்கு பெறும் வகையிலும், தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள் 2002 எனது அரசால் இயற்றப்பட்டது.

எனது ஆட்சிக்காலத்தில் ஊனமுற்றோருக்கென்று சிறப்பான பல திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்துவதில், தமிழக அரசு, ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்ததன் பயனாக 2004-ம் ஆண்டில் ஊனமுற்றோர் நாளன்று குடியரசு தலைவர் வழங்கிய 58 தேசிய விருதுகளில் 14 விருதுகளை தமிழகம்பெற்றது என்பதை பெருமையுடன் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

2005-ம் ஆண்டு பார்வையற்றோர் நலனுக்காகவும், மற்றும் பிற ஊனமுற்றோர் நலனுக்காகவும், பல் வேறு சலுகைகள் எனது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில், ஊனமுற்றோருக்கான சலுகைகள் அவர்களை சென்றடையவில்லை. உதாரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஊனமுறறோருக்கான சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், தொகுப்பு வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்படுவதில்லை என்றும், மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் ஊனமுற்றோர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்சியின் கடைசி கட்டத்தில் மாற்று திறனாளிகளுக்காக தனித்துறை அமைக்கப்படும் என்றும், இதற்காக 176 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்து இருப்பது ஊனமுற்றோர்களை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளது.

எனவே, ஊனமுற்றோருக்கான சலுகைகளை வழங்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குதல், சுயவேலைவாய்ப்பு செய்வதற்கான உதவிகள், ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் வழங்குதல் உள்பட அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (12-ந் தேதி) காலை 11 மணி அளவில் குன்னூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையிலும், நீலகிரி மாவட்டக் செயலாளர் செல்வராஜ், நீலகிரி மாவட்ட அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயல்லிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X