For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

30 மில்லியன் டாலருக்கு 'டெக்கன் 360' பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Deccan Cargo
மும்பை: கேப்டன் கோபிநாத்தின் டெக்கான் 360 கார்கோ விமான நிறுவனத்தின் 50 சதவிகிதப் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கென 30 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது ரிலையன்ஸ்.

ஏர் டெக்கன் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் கோபிநாத், அதை கிங்பிஷருக்கு விற்ற பிறகு, அடுத்து உருவாக்கிய நிறுவனம் டெக்கன் 360.

இப்போது இந்த நிறுவனத்தின் பங்குகளையும் விற்க முன்வந்துள்ளார். இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பார்தி ஏர்டெல், பெட்எக்ஸ் போன்றவை வாங்க ஆர்வம் காட்டின.

இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் டெக்கன் 360-ன் 30 முதல் 50 சதவிகிதப் பங்குகளை வாங்க முடிவு செய்து செய்து பேச்சு நடத்தி வருகிறது. இதற்கென ரிலையன்ஸ் நிறுவனம் 30 மில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதிகாரப்பூர்வமாக இரு நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிடவில்லை.

டெக்கன் 360 நிறுவனத்தில் தற்போது 8 சரக்கு விமானங்கள் உள்ளன. இவை தவிர 300 ட்ரக்குகள் மற்றும் 850 பைக்குகள் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுக்க உள்ள 900 ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ரிலையன்ஸின் இதர வணிக நிறுவனங்களுக்கிடையே சரக்குகளைக் கையாள இந்த டீல் உபயோகமாக இருக்கும் என நம்புகிறது ரிலையன்ஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X