For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை தாக்குதல் சம்பவ வழக்கு- ஒரு பார்வை

Google Oneindia Tamil News

மும்பை: மும்பைத் தாக்குதல் சம்பவ வழக்கு குறித்த ஒரு பின்னோக்கிய பார்வை..

2008, நவம்பர் 26: அஜ்மல் அமீர் கசாப் மற்றும் 9 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக் கராச்சியிலிருந்து மும்பைக்குள் நுழைந்து தெற்கு மும்பை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலை தொடங்கினர்.

நவம்பர்27: அதிகாலை 1.30 மணியளவில் கசாப்பை, கிர்காம் செளபாத்தி பகுதியில் வைத்து போலீஸார் சுட்டுப் பிடித்தனர். பின்னர் காயமடைந்திருந்த கசாப்பை நாயர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நவம்பர் 29: தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டு போலீஸில் வாக்குமூலம் அளித்தான் கசாப்.

-தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான அனைத்து இடங்களும் மீட்கப்பட்டன. 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர்.

டிசம்பர் 27-28: கசாப்பை அடையாளம் காட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது.

2009, ஜனவரி, 13: மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கப்பட்டது. தனி நீதிபதியாக எம்.எல்.தஹிளியானியை மகாராஷ்டிர அரசு நியமித்தது.

ஜனவரி16: ஆர்தர் சாலை சிறைச்சாலை வளாகத்திற்குள் தனி கோர்ட் அமைக்க முடிவு செய்யரப்பட்டது.

பிப்ரவரி 5: தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைய பயன்படுத்திய குபேர் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், கசாப்புக்கு நடத்தப்படஜ்ட டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துப் போவதாக அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 20-21: மாஜிஸ்திரேட் ஆர்.வி. சாவந்த் முன்பு வாக்குமூலம் அளித்தான் கசாப்.

பிப்ரவரி 22: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கரிஞராக ஆஜராகிய வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கிலும் சிறப்பு அரசு வழக்கறிஞராக அறிவிக்கப்பட்டார்.

பிப்ரவரி25: கசாப், பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் மீது எஸ்பிளனேட் பெருநகரகோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 1: கசாப்பின் வழக்கறிஞராக அஞ்சலி வாக்மேர் நியமிக்கப்பட்டார்.

ஏப்ரல் 15: அஞ்சலி வாக்மேகர் கசாப்பின் வக்கீல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

ஏப்ரல் 16: கசாப்பின் புதிய வக்கீலாக அப்பாஸ் கஸ்மி நியமிக்கப்பட்டார்.

ஏப்ரல் 17: நீதிபதி தஹிளியானி முன்பு வாக்குமூலம் அளித்தான் கசாப். தாக்குதலை நடத்தியது நான் இல்லை, நடிக்கவே மும்பைக்கு வந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினான்.

ஏப்ரல் 20: கசாப் மீது 312 குற்றச்சாட்டுக்களை சுமத்தியது அரசுத் தரப்பு.

மே 6: தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுப்பதாக கூறினான் கசாப்.

மே 8: முதல் சாட்சி தனது வாக்குமூலத்தை கோர்ட்டில் தெரிவித்தார். கசாப்பை அவர் அடையாளம் காட்டினார்.

ஜூன் 23: ஹபீஸ் சயீத், ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 22 பேருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஜூலை 20: நீதிபதி தஹிளியானி முன்பு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான் கசாப்.

நவம்பர் 30: கசாப்பின் வக்கீல் கஸ்மி நீக்கப்பட்டார்.

டிசம்பர் 1: புதிய வக்கீலாக கே.பி.பவார் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர்16: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு தனது விசாரணையை முடித்துக் கொண்டது.

2010, பிப்ரவரி 11: மும்பை தாக்குதல் வழக்கில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிப்ரவரி 22: அமெரிக்காவில் சிக்கிய டேவிட் கோல்மேன் ஹெட்லி தன்னை வந்து பார்த்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினான் கசாப்.

மார்ச் 9: வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது.

மார்ச் 31: இறுதி வாதம் முடிவுக்கு வந்தது.

ஏப்ரல் 6: பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 9 பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உடல்களையும் புதைத்து விட்டதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் அறிவித்தார்.

மே 3: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X