For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். அமெரிக்கர் பைசலுக்கு எதிரான வழக்கில் ஆஜராகும் இந்திய அமெரிக்க வக்கீல்

Google Oneindia Tamil News

Preet Bharara
வாஷிங்டன்: நியூயார்க்கில் கார் குண்டு வைத்த்தாக பிடிபட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கர் பைசல் சஷாத்துக்கு எதிரான வழக்கில் எப்.பி.ஐ சார்பில் இந்திய அமெரிக்க வழக்கறிஞரான ப்ரீத் பராரா ஆஜஹராகவுள்ளார்.

இவர் ஏற்கனவே நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் ஷேக் முகம்மதுக்கு எதிரான வழக்கிலும் எப்பிஐ சார்பில் ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு வைத்த்தாக பிடிபட்டுள்ளார் பைசல். இவரது பூர்வீகம் பாகிஸ்தானின் கராச்சி யாகும். இவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ஆவார். தற்போது பெஷாவரில் பைசலின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தற்போது அமெரிக்க குடிமகனாக உள்ள பைசல், நியூயார்க் கார் குண்டு வைப்பு தொடர்பாக கைதாகியுள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் இந்திய அமெரிக்கரான பராரா ஆஜராகவுள்ளார்.

பராரா, கடந்த ஆண்டு மே மாதம் அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட 93 அரசு வழக்கறிஞர்களில் ஒருவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.

41 வயதாகும் பராரா இந்த வழக்கு குறித்துக் கூறுகையில், எந்த தீவிரவாதியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கறோம். இந்த வழக்கின் அனைத்து கோணங்களையும் விசாரணை அதிகாரிகள் தீவிரமாக அலசிக் கொண்டிருக்கின்றனர். நியூயார்க் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் உறுதியுடன் இருக்கிறோம் என்றார்.

நியூயார்க் தெற்கு மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞராக பராரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பராராவுக்கு கீழ் 200 வக்கீல்கள் பணியாற்றிவருகின்றனர். அனைவருமே மிக மிக முக்கியமான வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக ஊழல் வழக்கான காலன் குரூப் வழக்கையும் பராராதான் கையாண்டு வருகிறார். இந்த வழக்கில் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்தினம் மற்றும் இந்திய அமெரிக்கர்களான அனில்குமார், ராஜீவ் கோயல் பிரதிவாதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபின் பெரோஸ்பூர்தான் பராராவின் பூர்வீக ஊராகும். கடந்த 70களில் இவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர்.

பராராவின் தந்தை சீக்கியர், தாயார் இந்து. இவர்கள் இருவரும் பிரிவினைக்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியாவில், தற்போது பாகிஸ்தானில் உள்ள பகுதியில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பராராவின் மனைவி ஒரு முஸ்லீம். இவருடைய தந்தை பிரிவினையின்போது இந்தியப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தவர் ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X