For Daily Alerts
Just In
முதல்வர் கருணாநிதியுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
சென்னை : முதல்வர் கருணாநிதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வரின் அறையில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, குடியிர்ப்போர் நலச் சங்க ஆலோசகர் ஸ்ரீதரன், செயலாளர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்ததாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, May 9, 2010, 15:19 [IST]