For Daily Alerts
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியர் விருது

2010ம் ஆண்டுக்கான சிஐஎப் சன்சலானி குளோபல் இந்தியர் விருது வழங்கும் விழா வான்கூவரில் நடந்தது. அங்குள்ள கனடா இந்திய பவுண்டேஷன் இதற்கான விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் டாடாவுக்கு இவ்விருது அளிக்கப்பட்டது.
ரூ. 1 கோடி பரிசுத் தொகையைக் கொண்ட இந்த விருதுடன், பாராட்டுப் பட்டயமும் டாடாவுக்கு வழங்கப்பட்டது.
1962ம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்த ரத்தன் டாடா, 1991ம் ஆண்டு அதன் தலைவரானார். அன்று முதல் இதுவரை டாடா குழுமத்தின் வருவாய் 12 மடங்கு அதிகரித்துள்ளதாக கனடா இந்திய பவுண்டேஷன் பாராட்டுரைத்துள்ளது.