For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பி.இ சீட் கிடைக்கும்!

By Chakra
Google Oneindia Tamil News

Anna University
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 1.8 லட்சம் இடங்கள் உள்ளன. மேலும் 50 புதிய கல்லூரிகளும் தொடங்கப்படவுள்ளதால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பி.இ. சீட் கிடைக்கும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.

கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர்,

ஆசிரியர்கள் கற்பித்தலோடு மட்டுமின்றி, கற்கவும் வேண்டும். என்ஜினியரிங் படித்தால் மட்டுமே வேலை கிடைத்து விடாது. எடுத்தவுடன் அதிக சம்பளத்தை எதிர்பார்க்காமல், கிடைக்கும் வேலையில் சேர்ந்து அனுபவம் பெற வேண்டும்.

அதிக மாணவர்கள் சேரும் துறையில் சேர்வதை விட, மற்ற எல்லா துறைகளிலும் சேர வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் அதிகம் பேர் சேர்ந்தனர். இன்னும் 6 மாதங்களில் இந்தத் துறையில் மீண்டும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மெக்கானிக் மற்றும் சிவில் துறைகளிலும் நல்ல வாய்ப்புகள் உண்டு.

தமிழகத்தில் தற்போதுள்ள 454 பொறியியல் கல்லூரிகளில் 5.5 லட்சம் பேர் படிக்கின்றனர். நடப்பாண்டில் இவற்றில் 1.8 லட்சம் சீட்கள் உள்ளன. புதியதாக 50 கல்லூரிகள் வரவுள்ளன; அவற்றில் மூலம் 12,000 சீட்கள் சேர்க்கப்படும்.

இந்தாண்டு யாருக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்ற கவலையே வேண்டாம், விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்றார்.

பாலிடெக்னிக் மாணவர்கள் பி.இ. சேர விண்ணப்பங்கள்:

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் 2010-2011ம் ஆண்டு பி.இ, பி.டெக் ஆகியவற்றில் 2ம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 26ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை வழங்கப்படவுள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், ஓட்டேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும்.

விண்ணப்பங்களை நேரடியாக பெற விரும்புபவர்கள் செயலாளர், 2ம் ஆண்டு பி.இ-பி.டெக். சேர்க்கை 2010, ஏ.சி.சி.இ.டி, காரைக்குடி-630004 என்ற முகவரிக்கு ரூ.300க்கு காரைக்குடியில் பணமாக்கும் வகையில் டிமாண்ட் டிராப் எடுத்து விண்ணப்பங்களைப் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதே முகவரிக்கு ஜூலை 25ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்கான கவுன்சிலிங் ஜூலை முதல் வாரத்தில் காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற கூட்டம்:

இதற்கிடையே பிளஸ்-2 விடைத்தாள் நகல்களைப் பெற மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.

விண்ணப்பம் வாங்கவும் விண்ணப்பிக்கவும் மாணவர்கள் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அலைமோதினர்.

விடைத்தாள் நகலில் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு கூட்டலில் மார்க் விடுபட்டிருந்தால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை 20ம் தேதி வரை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். நகல்கள் 15 நாட்களில் தபாலில் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X