For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்ஸல்கள் கண்ணிவெடி தாக்குதல்-டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வெடித்து சிதறியது

By Chakra
Google Oneindia Tamil News

Tanker Train
பாட்னா: பிகாரில் ரயில் தண்டவாளத்தில் நக்ஸலைட்டுகள் நடத்திய பயங்கர கண்ணி வெடி தாக்குதலில் அந்த வழியாகச் சென்ற சரக்கு ரயிலின் 14 டீசல் டேங்கர்கள் வெடித்துச் சிதறி, உருண்டன.

அஸ்ஸாம் மாநிலம் பரூனியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் கொண்டா என்ற இடத்துக்கு டீசல் நிரப்பப்பட்ட 48 வேகன்களுடன் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

அந்த ரயில் பிகாரின் சம்பரான் மாவட்டம் முசாபர்பூர்- மோதிகாரி இடையே பிப்ரா என்ற இடத்தில் சென்றபோது கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து வெடித்த இந்த கண்ணிவெடிகளில் சி்க்கிய ரயில் தடம் புரண்டது. அதன் 14 டீசல் வேகன்கள் தீப் பிடித்து வெடித்து சிதறி உருண்டன. 35 வேகன்கள் தப்பிவிட்டன.

மாவோயிஸ்டுகளின் இந்தத் தாக்குதல் காரணமாக தண்டவாளத்தின் 40 அடி பகுதி வெடித்து சிதறிவிட்டது. தீப் பிடித்து எரிந்த வேகனிலும் 65,000 லிட்டர் டீசல் இருந்தது. இந்த சம்பவத்தில் வேன்களும் இந்த டீசலும் எரிந்து நாசமாகிவிட்டது. இவற்றின் மதிப்பு சில நூறு கோடிகளைத் தாண்டும் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் காரணமாக அந்த வழியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டடுள்ளது. சம்பவ இடத்திலிந்ந்து மாவோயிஸ்டுகளின் துண்டு பிரசுரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தகவல் கொடுப்பவர்களைத் தான் தாக்குகிறார்கள்-லாலு:

இந் நிலையில் தங்களைப் பற்றி போலீசுக்கு தகவல் கொடுப்பவர்களைத் தான் நக்ஸல்கள் தாக்குகிறார்கள் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

அவர் கூறுகையில், நக்ஸல்களை தீவிரவாதிகள என்று சொன்ன சட்டீஸ்கர் மாநில பாஜக முதல்வர் ரமன் சிங் போன்றவர்கள் தான் மாவோயிஸ்ட் வன்முறை பரவ காரணம்.

அதே போல நக்ஸல்களை கட்டுப்படுத்த பிகார் மாநில அரசும் தவறியுள்ளது. நாமும் பல ஆண்டுகளாக பார்த்துவிட்டோம், நக்ஸல்கள் அப்பாவிகளைத் தாக்குவதில்லை. தங்களைப் பற்றி உளவு சொல்பவர்களை அவர்களைத் தாக்குவது வேறு விஷயம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X