For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?

By Chakra
Google Oneindia Tamil News

Flight Crash
திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன.

அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது.

இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் வழங்கவில்லை என்று கோழிக்கோடு, மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்டுகளை தங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். நாடு திரும்பும்போது மட்டும் அதை பெற்று கொள்ள முடியும்.

ஆனால் பல நிறுவனங்கள் அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் இவர்களைப் போன்றவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதற்காகவே வளைகுடா நாடுகளில் பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

நிறுவனங்களிடம் இருந்து பாஸ்போர்ட் முடியாதவர்கள் எப்படியாவது நாடு திரும்ப வேண்டும், என்பதற்காக பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் பயணம் செய்கின்றனர். இப்படிதான் விபத்தில் சிக்கிய மங்களூர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X