For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சி செய்வது எப்படி?-'க்ளாஸ்' எடுக்கும் மோடி!

By Chakra
Google Oneindia Tamil News

Narendra Modi
டெல்லி: வளர்ச்சித் திட்டங்களை சரியாகப் பயன்படுத்தி மாநிலத்தை சிறப்பாக ஆட்சி செய்வது எப்படி என்று பிற மாநில பாஜக முதல்வர்களுக்கு வகுப்பெடுக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

பாஜக தேசிய மாநாடு வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் மும்பை அருகே உள்ள பிரபோதினி என்ற இடத்தில் நடக்கிறது.

சிறப்பாக ஆட்சி செய்வது எப்படி என்ற பெயரில் இந்த மாநாடு நடக்கிறது.

இதில், பாஜக ஆளும் மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை எப்படி அமல்படுத்துவது என்ற ஆலோசனை நடக்கிறது.

இதன் முக்கிய அம்சமாக பாஜக முதல்வர்கள் கூட்டமும் இடம் பெறுகிறது. அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வளர்ச்சி திட்டப் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று மற்ற முதல்வர்களுக்கு பாடம் நடத்துகிறார். இதற்கான ஏற்பாட்டை பாஜக தலைவர் நிதின் கட்காரியே செய்துள்ளார்.

குஜராத்தில் நரேந்திர மோடி சிறப்பான முறையில் வளர்ச்சி திட்டங்களைச் செய்திருப்பதால் அவரை வகுப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர் மனோகர் பிரிக்கார் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X