For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சர் மு.க.அழகிரியுடன் குஷ்பு சந்திப்பு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல பொறுப்பாளருமான மு.க.அழகிரியை இன்று நடிகை குஷ்பு சந்தித்தார்.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த குஷ்பு, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இந் நிலையில் சமீபத்தில் வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, அமைச்சர் மு.க.அழகிரியை முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று குஷ்பு சந்தித்தார்.

அப்போது திமுகவில் இணைந்த குஷ்புவுக்கு அழகிரி வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின் போது முதல்வரின் மனைவி தயாளு அம்மாளும் உடனிருந்தார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குஷ்பு கூறியுள்ளார்.

அதே போல ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கே.பி.ராமலிங்கம், தங்கவேல் ஆகியோர் இன்று முதல்வர் கருணாநிதியையும் மு.க.அழகிரியையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X