For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

By Chakra
Google Oneindia Tamil News

Al Gore and Tipper
வாஷிங்டன்: 40 வருட கால திருமண பந்தத்தை முடித்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோர் மற்றும் டிப்பர் தம்பதியினர்.

புவி வெப்ப மாற்ற விழிப்புணர்வுப் பிரசாகராகவும் இருந்து வருகிறார் அல்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்கோரும், அவரது மனைவி டிப்பரும் 40 ஆண்டு காலமாக இனிய இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக தத்தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அல் கோர் மற்றும் டிப்பரின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் கலி க்ரீடர் என்பவர் கூறுகையில், இந்த இக்கட்டான நேரத்தில் தாங்கள் தனிமையை அதிகம் நாடுவதாக இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.

அல் கோரும், டிப்பரும் இணை பிரியா தம்பதியாக இருந்தவர்கள். பொது இடங்களுக்கு வரும்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், பாசமும், அமெரிக்காவில் வெகு பிரபலம்.

தாங்கள் பிரியப் போவது குறித்து அல் கோரும், டிப்பரும் பொலிட்டிகோ என்ற இணையதளத்தில் அவர்கள் தெரிவிக்கையில், மிகுந்த சிந்தனை மற்றும் விவாதங்களுக்குப் பின்னர் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதை அறிவிக்கிறோம்.

இது முற்றிலும் பரஸ்பரம் இணைந்து எடுத்த முடிவு. நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் எடுத்த முடிவு இது. நாங்களும், எங்களது குடும்பத்தினரும் தனிமையை விரும்புகிறோம். அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என விரும்புகிறோம். இதற்கு மேல் இதுகுறித்து விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அல் கோருக்கு தற்போது 62 வயதாகிறது. 2007ம் ஆண்டு புவி வெப்ப மாற்ற தடுப்பு பிரசாரத்திற்காக அவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். அதே ஆண்டில், புவி வெப்ப மாற்றத் தடுப்பு தொடர்பாக அவர் தயாரித்த டாக்குமென்டரிப் படத்துக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

டிப்பர் கோருக்கு 61 வயதாகிறது. அவரது முழுப் பெயர் மேரி எலிசெபத் டிப்பர் கோர். அவர் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைஞர். மன நலம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

1965ம் ஆண்டு இருவரும் முதல் முறையாக சந்தித்தனர். 1970ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

2000மாவது ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான ஜனநாயகக் கட்சியின் மாநாட்டின்போது அல் கோருக்கு நீண்டதொரு முத்தம் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் டிப்பர். இந்தப் புகைப்படம் அமெரிக்காவின் அனைத்துப் பத்திரிக்கைள், இன்டர்நெட் தளங்களில் பிரதானமாக இடம் பெற்றது.

1993 முதல் 2001 வரை பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர் அல் கோர். 2000மாவது ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியி்ட்டுத் தோல்வியுற்றார். அந்தத் தேர்தல் முடிவுகள் சர்ச்சையைக் கிளப்பின. ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்று அதிபரானார்.

வேறு பெண்ணுடன் அல் கோருக்குத் தொடர்பு?

மனைவி டிப்பரை அல் கோர் பிரிய இன்னொரு பெண்ணே காரணம் எனக் கூறப்படுகிறது. அல் கோருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையிலே தொடர்பு இருப்பதாகவும், இதுவே அல் கோர் தம்பதியின் பிரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று அல் கோர் மறுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X