For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ்: மீண்டும் பெரும் சரிவில் வேலைவாய்ப்பு... பங்குச் சந்தை வீழ்ச்சி!

Google Oneindia Tamil News

Job Market
நியூயார்க்: அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை இன்னும் பெற முடியாமல் தவிப்பதால், வேலைவாய்ப்பு மிகமிகக் குறைந்துவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 218000 புதிய வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உருவாக்கப்பட்டன. ஆனால் மே மாதம் வெறும் 41000 பணியாளர்களை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நியமித்துள்ளன.

அரசுத் தரப்பில் 431,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் 411000 வேலைகள் தற்காலிகமானவைதான். எனவே இவர்கள் குறித்த காலத்துக்குப் பின் வேலையற்றவர்களாகவே இருப்பார்கள். ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 9.9 சதவிகிதமாக இருந்தது. மே மாதம் 9.7 சதவிகிதமாக குறைந்திருந்தாலும், இந்த ஜூன் மாதம் 10 சதவிகிதமாகிவிடும் என்று முன்கணித்துள்ளனர் பொருளாதார அறிஞர்கள்.

வரும் மாதங்களில் தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிகுறியே இல்லை என்பதால் திகைப்பில் உள்ளது ஒபாமாவின் அரசு. பொருளாதார அறிஞர்கள் கணித்த இரண்டாவது வீழ்ச்சி இப்போதே தொடங்கிவிட்டதோ என்று பேசத் துவங்கியுள்ளனர்.

இன்னொரு பக்கம் ஐரோப்பிய யூனியனின் கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. இது ஐரோப்பிய யூரோ வலயத்தையே சிதறடித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. அப்படியொரு சூழல் உருவாகும்பட்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக முதலீட்டாளர்கள் ரிஸ்க்கான தொழில்களிலிருந்து தங்கள் பங்குகளை விலக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நியூயார்க் மெர்க்ன்டைல் எக்ஸ்சேஞ்சில் 1 பேரல் 73.05 டாலராகக் குறைந்துவிட்டது. ஒரே நாளில் 1.56 டாலர்கள் குறைந்துள்ளன (ஆனால் இந்தியாவில் இதுபற்றி அரசு மூச்சுக் காட்டுவதில்லை!)

இந்த வீழ்ச்சிப் போக்கில் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள சின்ன ஆறுதல், யூரோவின் வீழ்ச்சி. ஒரு வாரத்தில் மேலும் 10 சதவிகிதம் குறைந்து 1.20 டாலராகிவிட்டது யூரோ.

பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அமெரிக்க வேலைச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, அமெரிக்க பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. டவ் ஜோன்ஸ் எனப்படும் தொழில்துறை குறியீட்டெண்ணில் 160 புள்ளிகள் வீழ்ந்தன.

சிறிய பங்குகளுக்கான ரஸ்ஸல் 2000 சந்தையில் 1.9 சதவிகித வீழ்ச்சி காணப்பட்டது. நாஸ்டாக்கில் 1.2 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X