For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடல்நிலை சரியில்லை, விசாரணைக்கு வரமுடியாது - அமெரிக்காவிலிருந்து ரஞ்சிதா கடிதம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

சாமியார் என்று சொல்லிக் கொண்ட நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் செக்ஸில் ஈடுபட்ட வீடியோ வெளியான பிறகு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கர்நாடக போலீசார், அவரை இமாச்சல பிரதேசத்தில் கைது செய்தனர். 50 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பின் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலையாகி, மீண்டும் யாகம், பூஜை என பிஸியாகியுள்ளார் நித்யானந்தா.

நித்யானந்தா வழக்கில் ரஞ்சிதாவின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அவரை போலீசார் வலைவீசி தேடினர். சென்னை தியாகராய நகர், சாலிகிராமத்தில் உள்ள ரஞ்சிதா வீடுகள் மூன்று மாதங்களாக பூட்டியே கிடக்கின்றன.

கேரளா, ஹைதராபாத் பகுதிகளிலும் ரஞ்சிதாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் போலீசார் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. போலீசில் ஆஜராகும்படி அவரது வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால் அதை அவர் சட்டை செய்யவே இல்லை.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக நீதிமன்ற ஆணை வாங்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இத் தகவலைத் தெரிந்து கொண்ட ரஞ்சிதா, தானே விசாரணைக்கு பெங்களூர் வருவதாக இருமுறை கடிதம் அனுப்பினார். ஆனால் விசாரணைக்கு வரவே இல்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தந்தை வீட்டில் ரஞ்சிதா இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. நித்யானந்தாவை கைது செய்த சில தினங்களுக்குள் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டாராம் ரஞ்சிதா. ஆனால் இந்தியாவில் இருப்பது போல போக்கு காட்டி வந்துள்ளார். இதில் ரஞ்சிதாவின் வழக்கறிஞரும் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர்தான் ரஞ்சிதா எழுதியதாக கடிதங்களை போலீசாரிடம் அவ்வப்போது கொடுத்து வந்தார்.

ஆரம்பத்தில் வீடியோ காட்சிகள் போலியானவை என்று மறுத்து வந்தனர் நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும். ஆனால் தடய அறிவியல் சோதனைகளில் அந்த வீடியோ காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டதால், உண்மையை ஒப்புக் கொண்டு மவுனமாகிவிட்டனர்.

இப்போது தான் ஒரு சாமியார் அல்ல என்றும், தன்னை அப்படி எங்குமே சொல்லிக் கொண்டதில்லை என்றும் கூறி வருகிறார் நித்யானந்தா.

ஆனால் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வந்ததாக நித்யானந்தா மீது தொடரப்பட்ட வழக்கில், போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்று பயந்து ரஞ்சிதா அமெரிக்காவுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் எப்போது அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார் என்பது புரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர். ரஞ்சிதா இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள நித்யானந்தா ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்துள்ளனர்.

மணிரத்னத்தின் ராவணன் படத்தின் இறுதிக் காட்சிகள் கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் படமாக்கப்பட்ட போது, ரஞ்சிதா இங்குதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ரஞ்சிதா எழுதியுள்ள இந்த புதிய கடிதத்தில், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு வர இயலாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெற்று நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை உறுதிப்படுத்த போலீசார் போட்டிருந்த திட்டம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. நித்யானந்தா ஆதரவாளர்களும் ரஞ்சிதா போலீசில் சிக்காமல் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். வழக்கு முடியும் வரை அவர் தலைமறைவாகவே இருப்பார் என கூறப்படுகிறது.

ஆனாலும் ரஞ்சிதா வருகையை எதிர்பார்த்து விமான நிலையங்களில் ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X