For Daily Alerts
சென்னை கவின்கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர் உடல்-பதட்டம்
சென்னை: சென்னையில் உள்ள கவின் கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவரின் உடல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் கவின் கலை கல்லூரி உள்ளது. ஓவியம் குறித்த படிப்புக்கான கல்லூரி இது. இக்கல்லூரியின் வளாகத்தில் இன்று காலை ஒரு மாணவரின் இறந்த உடல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாணவர்கள் திரண்டனர். மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் கிளப்பினர். போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை வரும்வரை எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என மாணவர்களை சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் கல்லூரி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.