தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், சிறப்பு மலரை வெளியிட்டு அவர் பேசுகையில்,
இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளருமான கலைஞர் கருணாநிதி தலைமை வகிப்பதும் மிகவும் பொருத்தமானதாகும். டாக்டர் கலைஞர்தான் தமிழ்; தமிழ்தான் டாக்டர் கலைஞர். கலைஞரையும், தமிழையும் பிரிக்க முடியாது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
தமிழ் ஒரு அழகிய மொழி. சிறந்த தமிழாசிரியரான நன்னனிடம் நான் தமிழ் கற்றுக் கொண்டேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி விளங்குகிறது. அது சிந்தையின் வாகனமாகவும் திகழ்கிறது. அது சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக மட்டுமின்றி, சமூக அடையாளமாகவும் விளங்குகிறது.
சிந்தை வளம், மொழி அழகு, போராட்டமான வளர்ச்சி மற்றும் நல்லவற்றை உறிஞ்சும் தன்மை ஆகியவற்றாலேயே தமிழ்மொழி, உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. இலங்கை மற்றும் மலேசியா நாடுகளின் அதிகாரப்பூர்வமான மொழியாகவும் தமிழ் திகழ்கிறது. உலகில் 55க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகவும் அறிகிறேன்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை விளக்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்னும் கருத்தை மையமாகக் கொண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை டாக்டர் கலைஞர் உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளுவரின் கருத்துக்கள் எல்லா காலங்களுக்கும் பொருத்தமானவையாகும். மகாவீரர், குருநானக் மற்றும் கபீர்தாஸ் ஆகியோரின் போதனைகளும், திருவள்ளுவரின் கருத்துக்களும் ஒத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
திருக்குறள், தமிழ்மொழியின் கிரீடமாகும். சங்க இலக்கிய பாடல்கள் மற்றும் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை, தமிழ் மொழியின் அணிகலன்களாகும். தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்து தகுதிக்கு உரித்தானதே என்பதை விளக்குவதாக அவை அமைந்துள்ளன.
இந்த மாநாட்டில், சிறந்த மொழியாம் தமிழ் மொழியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பற்றி விரிவாக விரிவாதிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications