For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி தலைமையில் இன்று கருத்தரங்கம்-ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

Karunanidhi
கோவை: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 3வது நாளாக இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமாக முதல்வர் கருணாநிதி தலைமையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையேற்கும் இந்த கருத்தரங்கம் இன்று மாலை 4 மணிக்கு மாநாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி, தி.க. தலைவர் கி.வீரமணி, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன், சிபிஐ தலைவர் டி.ராஜா, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், காதர் மொஹைதீன், ஸ்ரீதர் வாண்டையார், பூவை ஜெகன்மூர்த்தி, தாவூத் மியாகான், சந்தானம், செல்லமுத்து, திருப்பூர்அல்தாப், பஷீர் அகமது, உடுமலைப்பேட்டை லியாகத் அலிகான் ஆகிய பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

3வது நாளான இன்று செம்மொழி மாநாட்டில் நடைபெறும் பிற நிகழ்வுகள்:

காலை நிகழ்வுகள்

காலை 9 - 9.45 மணிவரை இஞ்சிக்குடி சுப்பிரமணியம் குழுவினரின் மங்கல இசை

9 மணி - அமரர் ஒன்று அரங்கத்தில் அருண் மகிழ்னன் தலைமையில் காலை கணிப்பொறி வழி தமிழ் கற்றல் என்ற தலைப்பிலான ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் பன்னாட்டு அறிஞர்கள் பேசவுள்ளனர்.

கவியரங்கம்

10 மணி- கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்-கவியரங்கம்

வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன் தொடக்க உரையாற்றுகிறார். இதில் கலந்து கொண்டு நெல்லை ஜெயந்தா, முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணாநிதி, கவிஞர் விவேகா, கவிஞர் நா. முத்துக்குமார் பங்கேற்று கவி பாடுகிறார்கள்.

10.30 மணி - கையடக்கப் பேசியில் தமிழ்

மலேசியாவின் முத்து நெடுமாறன் தலைமை தாங்குகிறார். பல்வேறு தலைப்புகளின் கீழ் அறிஞர்கள் பேசவுள்ளனர்.

தரவுத் தளங்கள் குறித்த ஆய்வரங்கம்

காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆய்வரங்குக்கு ஜெர்மனியின் சுபாஷினி டிரம்மல் தலைமை தாங்குகிறார்.

இணையத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழி மற்றும் திறவூற்று செயலிகள் குறித்த ஆய்வரங்கம் காலை 10.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் முகந்தராஜா தலைமையில் தொடங்குகிறது.

காலை 11.30க்கு பட்டிமன்றம்

காலை 11.30 மணிக்கு மாநாட்டு வளாகத்தில், தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பிலான பட்டிமன்றம் நடைபெறுகிறது.

நடுவராக பேராசிரியர் சோ. சத்தியசீலன் பங்கேற்கிறார். தொடக்க உரை நிகழ்த்துகிறார் குமரி அனந்தன். சங்க இலக்கியமே என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ், முனைவர் சுந்தர ஆவுடையப்பனும், இடைக்கால இலக்கியமே என்றதலைப்பில் அ. அறிவொளி, தேச மங்கையர்க்கரசியும், இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பேராசிரியர் அரங்க மல்லிகா, தென்னவன் ஆகியோரும் பேசுகின்றனர்.

பிற்பகல் நிகழ்வுகள்

1.30 மணி கணிப்பொறி வழி தமிழ் கற்றல் ஆய்வரங்கம் தொடங்குகிறது.

அமரர் 2 அரங்கத்தில், கணிப்பொறி மொழியியல் குறித்த ஆய்வரங்கம் நடைபெறுகிறது.

அமரர் 3அரங்கத்தில், கணினியில் தமிழ்ப் பேச்சு மற்றும் சொற் பகுப்பு ஆற்வு ஆய்வரங்கம் நடைபெறுகிறது.

அமரர் 4 அரங்கத்தில் மின்னரசும், தமிழ் தகவல் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான ஆய்வு நடைபெறுகிறது.

மாலை 3 மணியளவில் மாநாட்டு வளாகத்தில், ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

மாலை 3.30 மணிக்கு அமரர் ஒன்று அரங்கத்தில் கணிப்பொறி வழி தமிழ் கற்றல் என்ற தலைப்பிலான விவாதம் நடைபெறுகிறது.

அமரர் 2 அரங்கத்தில் 3.30 மணிக்கு மின்னரசும் தமிழ் தகவல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது.

அமரர் 3 அரங்கத்தில் தமிழ் ஒருங்குறி, தரவுத் தளங்கள், தேடல் கனிமங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறுகிறது.

அண்ணன்மார் கதை

மாலை 5. 30 மணி முதல் 6.30 வரை கூத்துப்பட்டரை முத்துச்சாமி வழங்கும் ஆற்றாமை என்ற நாடகம் தொல்காப்பியர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

மாலை 6.30 முதல் 7.30 வரை பூலவாடி முத்து மீனாட்சி வழங்கும் அண்ணன்மார் கதை நிகழ்ச்சி தொல்காப்பியர் அரங்கத்தில் நடைபெறும்.

இரவு 7.30 மணிக்கு பிரசன்னா ராமசாமி இயக்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

அத்துடன் 3ம் நாள் நிகழ்வுகள் முடிவுக்கு வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X