ஜார்ஜ் பெர்னாண்டஸை கோர்ட்டில் ஆஜர்படுத்த மனைவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜார்ஜ் பெர்னாண்டஸை யார் பாதுகாப்பது என்பது தொடர்பாக அவரது மனைவிக்கும், சகோதரர்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்த மோதல் தற்போது மேலும் சிக்கலாகியுள்ளது. பெர்னாண்டஸை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெர்னாண்டஸின் சகோதரர்களான ரிச்சர்ட் மற்றும் மைக்கேல் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி, ஜூலை 5ம்தேதி மாலை 4 மணிக்குள் பெர்னாண்டஸை அவரது மனைவி லீலாகபீர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். பெர்னாண்டஸ் யாருடன் இருக்க விரும்புகிறார் என்பதை அவர் மூலமே தெரிய கோர்ட் விரும்புகிறது என்று உத்தரவிட்டார்.
பழம்பெரும் சோசலிச தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அல்ஸீமர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மனைவி லீலாவின் பாதுகாப்பில்தான் இருக்கிறார்.ஆனால் லீலா, பெர்னாண்டஸை சரிவர கவனிப்தில்லை என்று பெர்னாணாடஸின் சகோதரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களுக்கு முன்னாள் சமதாக் கட்சியின் தலைவரான ஜெயா ஜெட்லி ஆதரவாக உள்ளார்.
இவர்களின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லீலா கபீல், பெர்னாண்டஸின் சொத்துக்களைப் பறிப்பதற்காகவே அனைவரும் நாடகமாடுகின்றனர் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில்தான் பெர்னாண்டஸை நேரில் ஆஜர்படுத்துமாறு டெல்லி உயர்நீத்மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.