For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரிவிலிருந்து மீளுமா மாருதி சுசுகி?

Google Oneindia Tamil News

Maruthi Ritz
மும்பை: இந்திய நடுத்தர வகுப்பு மக்களின் விருப்பக் காராக இருந்து வந்த மாருதி இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதிலிருந்து மாருதி மீளுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது மாருதி சுசுகி நிறுவனத்திற்கு பொருத்தமாக உள்ளது. வாகன தயாரிப்பில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளது மாருதி. விற்பனயாகும் 2 கார்களில் 1 மாருதியுடையது என்ற நிலைமை சிறிது காலம் தான் நீடித்தது.

ஆனால் தற்போது டாடா நானோவின் அறிமுகத்தாலும், போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், வோல்க்ஸ் வேகன் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளாலும், மாருதி நிறுவனத்தின் ஆனிவேரே ஆட்டம் கண்டுள்ளது.

பராமரிப்பு மற்றும் காலதாமதத்தால் மார்க்கெட்டில் பங்குகளை இழப்பது சகஜம். ஆனால் கடந்த 6 மாதங்களாகவே மாருதியின் நிலைமை கீழ்நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது.

எப்பொழுதும் பெருகிக்கொண்டிருக்கும் சிறிய ரக கார்கள் தயாரிப்பில் குறுகிய காலத்தில் நிறைய பிரான்ட்கள் வருகின்றன. இது மாருதியும் அறிந்ததே. மாருதியின் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று கார் நிபுணர் ஒருவர் கூறினார்.

டாடா துணிந்து நானோவை அறிமுகப்படுத்தியதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர்கள் மார்க்கெட்டை மெதுவாக பிடிக்கத் தான் இந்த உத்தியை கையாண்டார்கள். நானோ நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்க, டாடாவின் பங்குகள் 14.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சிறிய ரக கார்கள் விற்பனையில் போர்ட், ஜெனரல் மோட்டார்ஸுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது டாடா.

இவ்வளவு நடந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை மாருதி. வசதிகளை மேம்படுத்தவும், உற்பத்தியை பெருக்கவும் முடிவெடுத்துள்ளது அந்த நிறுவனம். இன்னும் 2 வருடங்களில் தனது உற்பத்தியை 2 லட்சமாக்க திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், டெயோடா எடியோஸ், நிசான் மைக்ரா போன்ற ஜாம்பவான்களால் மாருதிக்குக் கடும் போட்டி அதிகரித்துள்ளது. இதையெல்லாம் கடந்து தனது வல்லமையை காட்டுமா மாருதி? பொருத்திருந்து பார்ப்போம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X