For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டிப்பட்டியில் மு.க. அழகிரி தலைமையில் இன்று விழா

Google Oneindia Tamil News

Azhagiri
ஆண்டிப்பட்டி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி தொகுதியில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் இன்று பிரமாண்டமான அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை ஆகியவை இணைந்து ஆண்டிப்பட்டி தொகுதி முழுக்க கடந்த ஒரு மாதமாக இலவச மருத்துவ முகாம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று ஆண்டிப்பட்டியில் அழகிரி தலைமையில் மருத்துவ முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியுடன் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

சட்டமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், தயாராகுங்கள் என்று உலகத் தமிழ்செம்மொழி மாநாடு நடந்த கோவையில் நின்று முழங்கினார் ஜெயலலிதா சமீபத்தில். இந்தநிலையில், ஜெயலலிதாவின் தொகுதியில் பிரமாண்டமான ஒருநலத்திட்ட உதவி விழாவை ஏற்பாடு செய்து அதற்கு அழகிரி தலைமை தாங்குவது எதையோ, யாருக்கோ உணர்த்துவது போல உள்ளதாக கருதப்படுகிறது.

இன்றைய விழாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கலந்து கொள்ள வைத்து பெரிய அளவில் கூட்டத்தைக் காட்டி அதிமுகவினருக்கு கிலி ஏற்படுத்த திமுகவினர் திட்டமிட்டு ஏற்பாடு செய்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X