For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஏற்றுமதியை குறைக்கும் மாருதி சுசுகி

Google Oneindia Tamil News

Maruti Suzuki
சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி தனது ஏற்றுமதியை கடந்த ஆண்டு அளவிற்கு தான் இந்த ஆண்டும் செய்ய உள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறியதாவது,

நாங்கள் ஏற்றுமதியில் மற்ற கார் தயாரிப்பாளர்களுடன் போட்டி போடவில்லை. எங்களுக்கு கொள்திறன் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு ஏற்றுமதி கடந்த ஆண்டு அளவை தாண்டாது என்று அவர் கூறினார்.

மாருதி சுசுகி 2008-09-ம் ஆண்டில் 1 லட்சத்து 47 ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் ஏ-ஸ்டார் கார் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம்.

ஏ-ஸ்டார் கார் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அல்ஜீரியா, சிலி, இந்தோனேசியா மற்றும் அன்டை நாடுகள் இந்த காரின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X