For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மராட்டியத்தில் இனி காலர் ட்யூன்களுக்கும் கேளிக்கை வரி!

By Chakra
Google Oneindia Tamil News

Caller Tunes
மும்பை: செல்போன்களில் வாடிக்கையாளர் காலர் ட்யூன்ஸ் எனப்படும் அழைப்பு இசையை பொருத்திக் கொள்வதற்கு வரிவிதிக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

'காலர் ட்யூன்கள் ஒருவரை மகிழ்விக்கவே செல்போன்களில் பொருத்தப்படுகின்றன. எனவே அவை கேளிக்கை வரிக்கு ஏற்றவையே' என மராட்டிய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

காலர் ட்யூன்களைப் பொருத்திக் கொள்ள இப்போது செல்போன் நிறுவனங்கள் மாதம் ரூ 30 கட்டணமாகவும், ஒவ்வொரு புதிய ட்யூன் மாற்றும் போதும் கூடுதலாக ரூ 15-ம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன.

இப்போது அரசும் தன் பங்குக்கு 25 சதவீத கேளிக்கை வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. இத்தகவலை மராட்டிய வருவாய்த்துறை செயலர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்புக்கு நிதித் துறையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்த பிறகு நிதித் துறை அனுமதி கிடைத்துவிடும் என ரமேஷ் குமார் தெரிவித்தார்.

இதுதவிர, இண்டர்நெட் சென்டர்கள் மற்றும் வீடியோ பார்லர்களுக்கும் கேளிக்கை வரி விதிக்க அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X